பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 4.

தொங்கிய சணல் கயிறுகள், அவன் முன்னால் துக்குக் கயிராய் தோன்றியது. நோஞ்சான் உடம்போடு, அவனிடம் பிச்சைக் கேட்பது போல் அகலக் வைவிரித்த தாயின் உருவம், அவன் கண்களில் பிம்பமாக விழுந்தது.

முத்தையா, தானே ஒரு தலைகீழ் பிம்பாமாய் மாறியதுபோல் தடுமாறினான். நெஞ்சுக்குள் கல்லூரி நிகழ்ச்சிகள் சிந்தனைக் கடலாய் பெருக்கெடுத்தாலும், அதனால் பேச்சு அலைகளை, வாய்க் கரைக்கு வெளியே அனுப்ப முடியவில்லை. மாணவர்கள் திகைத்தபோது, முத்தையா சுதாரித்துக் கொண்டு, 'என்' என்றான், மீண்டும். அப்போதும் பெற்றோர் உருவங்கள் எங்களைப் பார் என்பதுபோல் பட்டது. என்னைவிட எங்கள் பெரிதாகத் தோன்றியது. பேச்சே வரவில்லை. திடீரென்று, ஒரு பத்து நிமிஷம் அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி யபடியே, காம்பவுண்ட் சுவரில் இருந்து கீழே குதித்து, மாணவர் கூட்டத்தை விலக்கி, தானாக வழியமைத்தபடி, தொலைவில் நின்ற பெற்றோரைப் பார்த்து நடந்தான். பின்பற்றி நடந்து வந்த ஒருசில மாணவர்களை கையமர்த்தி நிறுத்திவிட்டு, வேகமாக நடந்தான்.

அவன், தாய் தந்தையரை நெருங்கியதும், அவனைப் பெற்றவர் 'நீ செய்யுறது நல்லா இருக்காடா. இதுக்காடா. ஒன்னை." என்று கத்தினார். பிறகு, மற்ற மாணவர்களுக்கு தன் பேச்சுக் கேட்டு, அது மகனின் தன்மானத்தை குந்தகப் படுத்தலாகாது என்று நினைத்தவராய் வாயடைத்து நின்றார். அழுது கொண்டெ, ஏதோ பேசப்போன மனைவியின் தோளைக் குலுக்கி, ஆள்காட்டி விரலை, தன் வாயில்வைத்து அழுத்தி, அவளுக்கு மெளன உபதேசம் செய்தார். பெற்றோர், பிள்ளையை பெற்ற போது பார்த்ததுபோல் பார்த்துக் கொண்டே நின்ற போது, முத்தையா சரி. அந்தப் பக்கமாய் போவோம் என்று சொல்லிக் கொண்டே, முன்னால் நடந்தான்.

மூவரும், ஒரு முட்டுச் சந்துக்கு வந்தார்கள். வழிமறிப்பதுபோல் நின்றபடி, தன்னையே வெறித்துப் பார்த்த பெற்றோரை, முத்தையா, பேச முடியாமல் பார்த்தான். எத்தனையோ கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில், எடுத்த எடுப்பிலேயே இவனுக்குத்தான் முதல் பரிசு என்று எல்லோரும் பேசும்படி, முக்கு மூலம் பேசாமலும், மொழியடுக்கில் விளையாடாமலும், நேய உணர்வு ஒன்றை மட்டும்ே நெறியாகக் கொண்டு பேசும் அவன், தந்தையையும் தாயையும் பார்க்க முடியாமல் பார்த்தான்.

பின்னர், தந்தையின் கண்கள் வீசிய அனல் வீச்சையும், தாயின் கண்கள் வீசிய புனல் வீச்சையும் தாங்கமாட்டாது, தான் செய்ததும் தவறாக இருக்குமோ என்ற அய்ய உணர்வுவோடு, அவல முகத்தோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/16&oldid=558619" இலிருந்து மீள்விக்கப்பட்டது