பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 148

"என் தோள்ல கிடக்குற பேன்ட் ஏன் ஒங்க கண்ணுக்கு தெரியல? இந்தாங்க, இதைப் போட்டுக்கங்கோ. இந்த புளு கலர், ஒங்களுக்கு மேட்சாய் இருக்கும். அதைவிட நல்ல பேன்ட் இது. காலேஜ் புரபஸராய் இருந்தும், என்னோட காலேஜ் அட்மிஷனுக்காக அலையாய் அலைஞ்சிங்க பாருங்க, அப்போ தைச்சது. சரியாவும் இருக்கும், அழகாயும் இருக்கும்."

"நீ ஒருத்தி. நான். என்ன. யுனிவர்ஸிட்டி செமினார்ல பேசவா போறேன்? மானத்தைக் காப்பத்துறதுக்கு கோர்ட்டுக்குப் போனேன். போனபிறகுதான், அது இருக்கிறவன், அங்கே போகப்படாதுன்னு புத்தி வந்தது. உள்ளம் உடைஞ்சு கிடக்கும்போது, உடம்புல எந்தத் துணி இருந்தால் என்ன? எது போட்டாலும் அங்கே துணியே இல்லாதவன் மாதிரிதான் நான் துடிக்கேன்."

"எப்பா.. எனக்குக் கெட்ட கோபம் வரும்."

"கோபமே கெட்டது. அதுல வேற கெட்ட கோபமா? எல்லாருமாய் சேர்ந்து, என்னை அம்போன்னு கோர்ட்ல தள்ளிட்டிங்க. இதனால. சேர்த்து வச்ச பணமும் போய், கடன் கடனாய் சேர்த்து வச்சாச்சு. பேசாமல். அந்த அப்பாவுப் பயல். சஸ்பென்ட் செய்தவுடனேயே, வேலையை ராஜினாமா செய்துட்டு டியூட்டோரியல் காலேஜ்லயாவது சேர்ந்திருக்கலாம். என்னால் பொறுப்புள்ள தந்தையாயும் நடக்கதுக்கு முடியல; ஆசிரியராயும் நடக்கதுக்கு முடியல..."

"பேசுனால். கதை கதையாய்ப் பேசுவிங்க."

பேராசிரியருக்கு, விவகாரம் நாயர் பிடித்த புலிவால்போல் தோன்றியது. அதை வெளிப்படுத்திப் பேசினார்.

கோர்ட்டுக்குப் போகாமல் இருந்து, அப்படியாவது வழக்கு டிஸ்மிஸ் ஆகட்டுமுன்னு நினைக்கேன். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், எதிர்பர்ட்டி என்மேல, மெலிஷயஸ் பிராஸிகியூஷன் என்கிற குற்றச்சாட்டுலு, வழக்குப் போடலாமாம். விடவும் முடியல, தொடவும் முடியல. பத்திரிகைக்காரன் கோர்ட்டுக்கு கார்ல வாறான். அதுவும் ஒவ்வொரு வாய்தாவுக்கும், ஒவ்வொரு விதமான கார்ல வாரான். நான். என்னடான்னா, பஸ்ல பாரிமுனைக்குப் போய், அப்புறம் ஆட்டோவுல வக்கீலை ஏத்திட்டுப் போறேன். ஆட்டோ மீட்டர் ஏறும்போது, என் இருதயமும் தொண்டைக்குள் ஏறுறது மாதிரி தெரியுது. நான் இன்னைக்கு, கோர்ட்டுக்குப் போகலம்மா. வேட்டியை எடுத்துட்டுவா. பேண்டை மாற்றிட்டு, கட்டிலுல ஒரேயடியாய் படுக்கப் போறேன். நான்சென்ஸ் இடியாட்டிக் அட்ரோஷியஸ். ஹைக்கோர்ட் அனுபவமே எனக்குப் புத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/160&oldid=558767" இலிருந்து மீள்விக்கப்பட்டது