பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 * சத்திய ஆவேசம்

கொடுத்திருக்கணும். என் சஸ்பென்ஷனுக்குக் கோர்ட் கொடுத்த ஸ்டேயை இழுத்தடிச்சு, கடைசில, டிரஸ்ட் போர்ட் அந்த ஸ்டேய்க்கே ஹைகோர்ட் பெஞ்சில ஸ்டேய் வாங்கிட்டாங்க. இந்த வழக்குல நான் ஜெயிச்சாலும், வாடிக்கைக்காரன், செஷன்போர்ட் ஹைகோர்ட்னு மேல மேல போவான். நான் கீழே கீழே போவேன். பேசாமல் இப்பவே குப்புறப் படுக்கிறது பெட்டர்."

மேகலா, தவிப்பாய் தவித்து, கொதிப்பாய் கொதித்து தப்பிக்க வழிதெரியாது தடுமாறி தந்தையை, அவரைப் போலவே பார்த்தாள். பார்க்கப் பார்க்க கண்கள் எரிந்தன. தந்தையின் பிரச்சனையை, ஒரு சமூக விகாரமாகப் பார்த்தாள். அந்த விகாரத்தின் கோரப் பற்களை எண்ணிப் பார்ப்பவள்போல், அசைவற்று நின்றாள். பிறகு, நையாண்டியால் பேசுவதுபோல் பதிலளித்தாள்.

'புலி வாலைப் பிடிச்ச நாயரே! அந்த புலிமேல ஏறினால்தான், அதோட வாய்மேல நாம் விழாம இருக்கலாம். புரியுதா.

பேராசிரியர், மேகலாவை புரிவதுபோல்ப் பார்த்தபடியே விடைபெறப் போனார். இந்தக் காலத்து இளைய தலைமுறையில் ஒரு பகுதி. காலத்தை மீறி, அதற்கு அப்பாலும் சிந்திக்கத்தான் செய்கிறது. மகளின் உபதேசம், அவருக்கு நாடி நரம்பெங்கும், ஷாக் அடிக்காத மின்சாரத்தைப் பாய்ச்சியது. 'நீ காலேஜிக்கு போகலியா

'இப்போ அதுதான் குறைச்சல். போம்மா... நாளைக்கு போறேன்.'

"வாறேம்மா”.

"சாப்பாடு?

"வேண்டாம், இப்பவே மணி பத்து. ஒரு மணிக்குத்தான் கூப்பிடுவாங்க. ஆனாலும், கோர்ட்ல பதினொரு மணிக்கு கரெக்டாய் இருக்கணும். கவலைப்படாதே காம்பவுண்டுக்குள்ளே சுக்குக் காபியும், மசால் வடையும் போடுறாங்க?"

"பணம் எவ்வளவு தேறுது?

"இருபது ருபாய்க்கு ஒரு ருபாய் பதினெட்டுப் பைசா குறைச்சல், போன வாய்தா உன்னோட மோதிர உபயம். இந்த வாய்தாவுக்கு, பீரோவைக் குடைஞ்சேன். டப்பாக்களை உருட்டினேன். ஒனக்கு ஏதும் செலவுக்கு வேணமா?

'உம்-உம். வேண்டாம். ஒங்களுக்கே பாவம் போதாது. எதுக்கும் மூன்று ரூபாய் மிச்சம் பிடிக்க முடியுமான்னு பாருங்க. அரைக்கிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/161&oldid=558768" இலிருந்து மீள்விக்கப்பட்டது