பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

  • சு.சமுத்திரம்

"அட்மிஷனுக்கு மூவாயிரம் ருபாய் விதம் வாங்கியிருந்தால்..? கல்லூரிப் பொருட்கள், லைப்ரரி புத்தகங்கள், பரீட்சை பேப்பர்களத் திருத்துறதுல அட்ஜெஸ்ட்மென்ட்கள். இதையெல்லாம் கணக்குப் போட்டால் தேறும். அதோட."

"இதுவே போதும் சார். இன்னும் விவரம் சொன்னால், என்னால பதில் சொல்ல முடியாது. பிணம் பேசாது பாருங்கோ."

இன்ஸ்பெக்டர் பெண், அவர்களை ஆற்றுப்படுத்தினாள். "டோண்ட் ஒர்ரி ஸார். நீங்க எப்படிப் பணம் சம்பாதிச்சாலும், எங்களுக்கு அக்கறையில்லை. நாங்க ஊழல் ஸ்கோட் இல்ல. வருமானவரி கட்டாமல், எவ்வளவு பணம் வச்சிருக்கிங்கன்னு மட்டுமே கண்டுபிடிக்கப் போறோம்."

"என்னம்மா நீ? நான் ஏதோ தப்புத் தண்டாவாய் பணம் சேர்த்துவிட்டு. இப்போ ஒர்ரி பண்றது மாதிரி பேசுறீங்க? நீங்க. பணக்கணக்கோடதான் பார்க்கிறீங்க. ஒரு பிரஜையை-ஒரு பேராசிரியரை-அவமானப்படுத்துறோமேன்னு நினைச்சுப் பார்க்சிற மனசு வரமாட்டேங்கே"

இன்ஸ்பெக்டர் பெண், பதிலளிக்க முடியாமல் திண்டாடினாள். அந்தத் திண்டாட்டத்தை கொண்டாட்டமாக எடுத்துக்கொண்ட ஸ்டெனோ பெண், இன்னொரு ஆண் இன்ஸ்பெக்டரிடம் காதில் கிசுகிசுத்தாள். மக்கு. மக்கு என்று மட்டும் அவர் காதில் வாயால் உரசினாள். அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் இன்கம்டாக்ஸ், இன்னும் வினயத்திற்கு விடையளிக்காமலே பேசினார்; கேட்டார். "டேக் இட் ஈஸி புரபஸர். மேய். வி. கம் இன்." அப்போதுதான், அவர்கள் படிதாண்டாமல் நிற்பதைக் கவனித்த பேராசிரியர், "என்ன ஸார் கேள்வி இது? நான் வரக்கூடாதுன்னாலும் நீங்க வராமல் இருப்பிங்களா?" என்றார். உதவி பதிலளித்தது உடனடியாக,

"அப்படி ஒரு நிலைமை வந்தால், போலீஸ் நிலையம் வழியாய் வருவோம்."

"இன்னும் அங்க மட்டுந்தான் போகலே. சரி. உள்ளே வாங்க." உள்ளே வந்தார்கள். வீட்டை, ஒட்டு மொத்தமாய் நோட்டம் விட்டபடியே நின்றார்கள். வீட்டு வசதி வாரிய் வீடு. லோ இன்கம் ஆட்களுக்காகக் கட்டப்பட்ட வீடு. ஒரு படுக்கையறை: ஒரு சின்ன பின்னறை வரவேற்பறை, முன்னறையான வரவேற்பறையில், ஒரே ஒரு சாய்வு நாற்காலி மட்டும் கிடந்தது. ஒரு சோபாசெட்கூட இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/164&oldid=558771" இலிருந்து மீள்விக்கப்பட்டது