பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 * சத்திய ஆவேசம்

என்னய்யா பிரின்ஸ்பால் இவன்? எல்லாத்தையும் பணமாகவோ நகையாகவோ வச்சிருக்கான். பேராசிரியர் அசல் கஞ்சனோ.

மேகலா, தன்னைச் சுதாரித்தபடி, சின்ன அறைக்குள் கிடந்த இரண்டு நாற்காலிகளையும், சமையலறையில் சாத்தி வைக்கப்பட்ட மடக்கு நாற்காலி ஒன்றையும் கொண்டு வந்து போட்டாள். நின்றவர்களில் சீனியர்கள், சீனியாரிட்டிபடி உட்காரப் போனார்கள். ஸ்டெனோ பெண் தான் இன்ஸ்பெக்டரம்மா குறிவைத்த நாற்காலியில் கும் என்று உட்கார்ந்தாள். இன்ஸ்பெக்டர்களில் இரண்டு பேர் டைரக்ட் ரெக்ருட்; இரண்டுபேர் புரமோட்டிவ்ஸ். இவர்களது சீனியார்ட்டி விவகாரம் கோர்ட்டில் நிற்கிறது. ஆகையால், நாற்காலி யில் உட்காருபவர்கள்தான், சீனியர்கள் என்று அனுமானிப்பது போல், எல்லோருமே உட்காரப் போனார்கள். அதற்குள் சாட்சிகள் அமர்ந்தார்கள். வந்ததே பெரிசு. நிற்கிறதாய் இருந்தால் சம்பளம் வாங்குறவங்கதான் நிற்கணும்.

பேராசிரியர் சங்கோஜத்தோடு பேசினார்.

"ஐ அம் ஸாரி. நாற்காலி இல்லாமல் போயிட்டு. மேகலா அந்தக் கட்டிலைத் தூக்கிட்டு வாரியா?

"நோ, தேங்க்ஸ் புரபலர். லெட் தெம் ஸ்டாண்ட்”

உதவி டைரக்டர் பீடிகை போட்டார்.

"ஒன் திங் ஸார், டெலிபோன் இருக்குதா?

"இல்லை. தேவையும் இல்லை."

"நல்லதாய் போச்சு. அப்புறம் ஒரு விஷயம். நீங்களோ, ஒங்க டாட்டரோ ரெய்டு முடியறது வரைக்கும் வெளில போகப்படாது. யாராவது வெளியில இருந்து வந்தாலும் நீங்களாய் பேசப்படாது. நாங்கதான் அவங்களை வரவேற்போம். அண்டர்ஸ்டாண்ட்?

பேராசிரியருக்கு எப்படியோ; மேகலாவுக்கு அண்டர்ஸ்டாண்ட் ஆகியது. தந்தையின் காதில் கிசுகிசுத்தாள். உடனே அவர் துள்ளிக் குதித்தார். இன்ஸ்பெக்டரம்மா, நின்றபடியே அதட்டினாள்.

"இந்தா பாருங்க ஸார், பாருங்கம்மா, நீங்க. ஒருத்தரோடு ஒருத்தர் பேசப்படாது ரகசிய சமிக்ஞை எதுவும் செய்யப்படாது. ஜன்னலுக்கு வெளியேயும் எட்டிப் பார்க்கப்படாது. அண்டர்ஸ்டாண்ட்? -

மேகலா, ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள்:

"அப்படின்னா நாங்க ஹவுஸ் அரஸ்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/165&oldid=558772" இலிருந்து மீள்விக்கப்பட்டது