பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 154

எவரும் அல்லது எவளும், அவளுக்கு பதிலளிக்காமல், பார்வையை மட்டும் அழுத்தமாக்கியபோது, பேராசிரியர் பெருமாள்சாமி எழுந்து, உதவி டைரக்டரிடம் மன்றாடினார்.

“ஸார். ஸார். நாளைக்கு ரெய்ட் வச்சுக்கங்க ஸார். இப்போ நான், அவசரமாய் வெளியே போகணும்."

இன்ஸ்பெக்டர்களை, சாட்சி மனிதர்கள், கண்ணடித்துப் பர்ர்த்தார்கள். அலிஸ்டெண்ட் டைரக்டர் பேராசிரியருக்குப் பதிலளித்தார்.

“ரெய்டோட எலிமென்டே சர்பிரைஸ்தான்."

"எனக்கு ஸர்பிரைஸ் இல்லை, ஷாக் ஸார். பட், அதுக்கு நான் கவலைப்படல. இப்பவே மணி பத்தரை. நான், வாடிக்கை பத்திரிகை மேலே கேஸ் போட்டிருக்கேன். பதினொரு மணிக்கு கோர்ட்ல இருக்கணும் ஸார்."

அஸிஸ்டெண்ட் டைரக்டர், அந்த விவகாரம் தனக்குத் தெரியும் என்பதுபோல், பேராசிரியரைப் பார்த்து தலையாட்டிவிட்டு, அந்த விவகாரம் தன் சகாக்களுக்கும் தெரியும் என்பதுபோல், அவர்களையும் பார்வையால் வட்டமடித்து விட்டு, சாவகாசமாய் கேட்டார்:

"வக்கீல் பார்த்துக்குவார் ஸார்."

"வக்கீலுக்கு ஆயிரம் கேஸ் ஸார். நான் பாரிமுனைக்குப் போய்த்தான், அவரைக் கூட்டிக் போகனும். எனக்காகக் காத்திருப்பார் ஸார். வருவன் வருவேன்னு காலத்தை வீணடிப்பார் ஸார். அதனால கோர்ட்ல கேஸ் டிஸ்மிஸ் ஆயிடும் ஸார்."

"டோண்ட் ஒர்ரி. ஒரு ஹியரிங்குக்கு கம்ப்ளெயின்டென்ட் போகல என்பதாலேயே, கேஸை டிஸ்மிஸ் செய்ய மாட்டாங்க. இன்னொரு சான்ஸ் கொடுப்பாங்க."

"மாஜிஸ்டிரேட் கொடுத்துட்டார் சார். அந்த சான்ஸ் போய், இது அடுத்த சான்ஸ் சார் போன வாய்தாவுல, இலங்கைப் படுகொலையைக் கண்டித்து, மெட்ரோபாலிட்டன் வக்கீல்கள் மறியல் செய்தாங்க. நானும் வக்கீலும் கோர்ட் இருக்காதுன்னு திரும்பி வந்துட்டோம் அன்றைக்கே பெஞ்ச் கிளார்க், நான் ஆப்லெண்டுன்னு எழுதி வச்சிட்டாராம். இன்றைக்கு இப்போ கோர்ட்டுக்கு போகாட்டால் அப்புறம் நான் வெளியே தலைகாட்ட முடியாது சார்:

"ஐ அம் ஸாரி, நீங்க போக முடியாது."

"அப்படின்னா, என் டாட்டரை அனுப்பி வைக்கேன் சார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/166&oldid=558773" இலிருந்து மீள்விக்கப்பட்டது