பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 * சத்திய ஆவேசம்

“ஸாரி சார். அலோ பண்ண முடியாது."

"அடுத்த வீட்ல் போய், வக்கீலுக்கு டெலிபோனாவது செய்யனும் சார்."

"லாரி சார்:

"வேணுமுன்னால் நீங்களும் கூட வாங்கோ சார்."

“Gmbrrif”

‘arakr arri?”

ஏன சாா:

"எங்களுக்கு ரெய்டுதான் முக்கியமே தவிர, ஒங்களோட பெர்ஸனல் சமாச்சாரம் அல்ல. அதோட. வக்கீல்கூட டெலிபோன்ல பேசுறதாய் சொல்லி, வேற நம்பருக்கு டெலிபோன் போட்டு, கோட் வோர்ட்ல பேச மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்? சயன்டிபிக்காய் கேட்கிறேன்"

"சயன்டிபிக் இல்ல, சயன்ஸ் பிக்ஷன். இது அக்கிரமம் சார். அநியாயம் சார். அட்டுழியம் சார். நானும் அந்தக் காலத்துல இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல வந்த ஒரு நல்ல வேலையை விட்டுட்டு, காலேஜ்ல பெரிசாய் கிழிக்கலாமுன்னு லெக்சரராய் சேர்ந்தவன் நான். ஸாரி ஸாரின்னு சாரி சாரியாய் சொல்றிங்க. அது ஒங்களுக்கு ஒரு வார்த்தைதானே தவிர, உணர்வில்ல சார்"

"லுக் மிஸ்டர் நீங்க இப்போ என் கண்ட்ரோலில் இருக்கீங்க."

மேகலாவால், ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. சார் போட்டவர், மிடுக்காய் மிஸ்டர் போட்டதை கேட்டாள். அப்பாவிடம் கத்தினாள்:

"தலைக்கு மேலே வெள்ளம் போயிட்டு. இனிமேல எப்படிப் போனால் என்ன? அவரு நம்மை கொத்தடிமையாய் எடுத்தவர் மாதிரி பேசுறார். நீங்க ஏன் பிச்சை எடுக்கிறீங்க? மிஸ்டர் அளிஸ்டெண்ட் டைரக்டர் ஒங்க சோதனையை சீக்கிரமாய் துவக்குறிங்களா? டயத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்."

அதிகாரிகள், அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள். அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவளைக் கண்டுக்காமலே பேசினார்:

"தேங்க் யூ. டயத்தை வேஸ்ட் செய்யுறது நாங்க இல்லை. ஒ.கே. மொதல்ல, ஒரு ஸ்டேட்மென்டை ரிக்கார்ட் செய்யனும். அப்பபுறம்தான் சர்ச். மிஸ்டர் பெருமாள்சாமி, யூ ஆர் அண்டர் உறுதிமொழி. பொய்த் தகவல் கொடுத்தால் கிரிமினல் அபன்ஸ். அண்டர்ஸ்டாண்ட்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/167&oldid=558774" இலிருந்து மீள்விக்கப்பட்டது