பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 156

"நோ அண்டர்ஸ்டாண்ட், நான் எப்போ உறுதிமொழி எடுத்தேன்?"

"எடுக்காட்டிலும், எடுத்ததாய் அனுமானித்திட்டேன்." "நோ, இப்படித்தான் பல சமாச்சாரங்களை அனுமானிப்பிங்க. அதனாலதான் டாட்டா, பிர்லா, சுதர்சனம் எல்லாம் தப்பிக்கிறாங்க. டேக் மை ஒத் பஸ்ட்."

அஸிஸ்டெண்ட் டைரக்டர் அசந்து போனார். இந்த ஆள் கோமாளி அல்ல. லேசுப்பட்டவனும் இல்ல. ஒரு புத்தகத்தை பேராசிரியரிடம் நீட்டி, பிரமாணம் வாங்கிக் கொண்டார். பென்சிலும், நோட்டுமாய், தன்னைப் பார்த்த ஸ்டெனோ பெண்ணிடம் தலையாட்டினார். விசாரணையைத் துவக்கினார்.

"கிராமத்துல நிலம் இருக்குதா?

"ஒரு ஏக்கர் இருந்துது. நான் குடும்பத்து பொதுச் சொத்துல படிச்சதால, தம்பிக்குக் கொடுத்திட்டேன். நீங்க கேட்கிறதுக்கு முன்னாலேயே சொல்லிடுறேன். வேற சொத்து எதுவும் கிடையவே கிடையாது."

"பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? "ஒரு அக்கெளண்டை மெயின்டெயின் செய்யுறதுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு இருக்கு."

"பிளிஸ், பீ பிராங்க."

"பத்து ருபாய் இருக்குது. அதுக்குக் கீழே எடுக்கக் கூடாதாம்!" "அப்புறம் லாக்கர்ல, நகை எவ்வளவு இருக்குது?" "எனக்கு இருக்கிற லாக்கர் இந்த வீட்டோட லாக்கர்தான்." "லுக் ஸார் தப்பான விவகாரம் கொடுத்தால், சட்டப்படி குற்றம்" மேகலா துடிப்போடு கேட்டாள்:

"ஒருவரை விசாரணைக்கு முன்னாலேயே, குற்றவாளியாய் நினைக்கிறது சட்டவிரோதமுன்னு சொல்லுங்கப்பா"

அளிஸ்டெண்ட் டைரக்டர் அவளை அதிர்ந்து பார்த்துவிட்டு, விசாரணையைத் தொடர்ந்தார்:

"இந்த வீட்டை எப்போ, எவ்வளவு ரூபாய்க்கு வாங்குனிங்க?"

"இது வாங்காத வீடு" வாடகை வீடு. நானூறு ருபாய் மாத வாடகை, இரண்டு மாதமாக வாடகை பாக்கி நிக்குது. வீட்டுக்காரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/168&oldid=558775" இலிருந்து மீள்விக்கப்பட்டது