பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 * சத்திய ஆவேசம்

ஒரு அரசியல்வாதி. சாமான்களையும், என்னையும் வெளில தூக்கிப் போடப் போறதாய் மிரட்டுறார். வாடகையே வேண்டாம், காலி பண்ணுங்கன்னு சொல்லிட்டார். பை தி பை, எங்கேயாவது இருநூறு ரூபாய்க்குள்ளே, வாடகை வீடு இருந்தால் சொல்லுங்க ஸார்."

"லெட் அஸ் நாட் டாக் பெர்ஸனல் மேட்டர். முதலீட்டுப் பத்திரங்கள் எவ்வளவு இருக்கு?

"ஜெனரல் ஷேர்ஸ், பிரிபரன்ஷியல் ஷேர்ஸ், ஈகுட்டி ஷேர்ஸ், டிவிடண்டுன்னு, காலேஜ்லு பாடம் நடத்தியிருக்கேன். இந்த விஷயத்துல நான் ஏட்டுச் சுரைக்காய்."

அளிஸ்டெண்ட் டைரக்டரின் நெற்றி சுருங்கியது. அந்த சுருக்கத்தோடயே எழுந்தார். ஸ்டெனோ பெண், பத்து நிமிடத்தில் பூர்த்தி செய்த ஒரு படிவத்தை, பாஸிடம் நீட்டினாள். அவர், அதை பேராசிரியரிடம் நீட்டி, கையெழுத்து வாங்கிக் கொண்டார். பிறகு, சகாக்களைப் பார்த்து யெஸ். என்று ஆஸ்த்துமா நோயாளி மாதிரி இழுத்துப் பேசினார். இன்ஸ்பெக்டர்கள், அங்கிருந்து எழுந்து போய் வளைந்து, ஆளுக்கொரு பக்கமாக நுழைந்தார்கள். பேராசிரியர், சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

படுக்கையறையில் இருந்த பீரோவை, மேகலா திறந்தாள். ஒரு இன்ஸ்பெக்டர் அதிலுள்ள துணிகளை வெளியே இழுத்துப் போட்டார். இன்னொரு இன்ஸ்பெக்டர், அவற்றை ஒவ்வொன்றாக உதறினார். பேண்ட் பைகளைத் துழாவினார். மடித்த புடவைகளைப் பிரித்தார். பிறகு, பீரோவுக்கு மேல் கைகளால் துழவினார். கந்தைத் துணிகள் வந்தன. கழிவுப் பேப்பர்கள் விழுந்தன. பீரோ டிராயர்கள் திறக்கப்பட்டன. ஒரே காகிதக் குவியல். பெரிய பெரிய காகிதங்கள். அவற்றை எடுத்துக் கொண்டு, அறையை நோட்டமிட்டு, கட்டிலுக்குக் கீழே குனிந்தும், மெத்தையை தூக்கிப் பார்த்தும், நிலைக் கண்ணாடிக்குப் பின்னால் பார்த்தும், தேடித் தேடிப் பார்த்துவிட்டு, இரண்டு இன்ஸ்பெக்டர்களும், அஸிஸ்டெண்ட் டைரக்டர் இருந்த முன்னறைக்கு வந்தார்கள். அங்கே, இடுப்பில் கை வைத்தபடி நின்ற இரண்டு சாட்சிக்காரர்களும், தலையின் கைவைத்தபடி சாய்ந்திருந்த பேராசிரியரை வெறித்துப் பார்த்தபடி விஷம முகங்களோடு தோன்றினார்கள். அஸிஸ்டெண்ட் டைரக்டர், இன்ஸ்பெக்டர் நீட்டிய காகிதக் குவியலை எதிர்பார்ப்போடு வாங்கினார். முதலீட்டுப் பத்திரங்கள் மாதிரி தெரியுதே.

ஒவ்வொரு தாளாக உருவினார்கள். பேராசிரியரின் முன்னாள் மாணவர்கள்-இப்போது பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அரசாங்க முத்திரை பதித்த காகிதங்களில், பேராசிரியருக்கு எழுதிய நன்றிக் கடிதங்கள்: பேராசிரியர் டாக்டரேட் பட்டம் வாங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/169&oldid=558776" இலிருந்து மீள்விக்கப்பட்டது