பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 180

மேகலா, புறப்பட்டவர்களை வழிமறிப்பது போல், வசாலில் நின்று கர்ஜித்தாள்.

"அதெப்டி சார் போறது? இந்த நாட்டின் கெளரவமான ஒரு குடிமகனின் பிரவேளியில் தலையிட்டிங்க. அக்கம் பக்கத்துல எங்களை சமூக விரோதியாய் காட்டிட்டீங்க. அறைகள் முழுதும் அலங்கோலமாய் ஆக்கிட்டிங்க. சிதறின பொருட்களை திருப்பி வைக்கிறதுக்கு கூலிக்கு ஆள் வச்சால்தான் முடியும். எங்ககிட்டே பணம் இல்லை. எதை எதை எங்கெங்கே கெடுத்திங்களோ, அதை அதை அங்கங்கே வச்சுட்டு போங்க"

அஸிஸ்டெண்ட் டைரக்டரும், அவரது சகாக்களும் நிஜமாகவே அதிர்ந்து போனார்கள். கூலிக்கு சாட்சி சொல்ல வந்த அந்த இரண்டு மனிதர்களும், குன்னிப் போனார்கள். ஏ.டி. வெட்கப்பட்டுப் பேசினார்.

"நீங்க உண்மையிலேயே கிரேட்மேன் சார். உங்க வீடு, ஒரு கோவில் சார். தெரியாத்தனமாய் வி.ஐ.பி. இன்பர்மேஷன்ல வந்துட்டோம் இப்படித்தான், இந்த பிரமுகர் பசங்க எதையாவது எழுதி அனுப்பிடுறாங்க. அதன் பேர்ல நாங்க நடவடிக்கை எடுக்காட்டால், எங்க மேலயே நடவடிக்கை எடுக்க வைப்பாங்க. தயவு செய்து பெர்ஸனலாய் எடுக்காதிங்க சார். ஒன்றே ஒன்று சார் துடுக்கோடு வந்த நாங்க துயரத்தோட போறோம் படாதி பசங்க. நீங்க பத்து லட்சம் ருபாய்க்கு ஒரு வீடு வாங்கி இருக்கதாயும், முதலீட்டுப் பத்திரங்கள் லட்சக் கணக்கான ரூபாய்க்கு வச்சிருக்கதாயும் எழுதிக் கொடுத்தாங்க. ஆனால், அவங்க மேல, இதுக்காக ஆக்ஷன் எடுக்க எங்களுக்கு அதிகாரமில்ல'

பெருமாள்சாமி, சிரித்தபடியே கேட்டார்.

"யார் இன்பர்மேஷன் கொடுத்தது? அப்பாவுவா, இல்ல. வாடிக்கை பத்திரிகையா?”

"அதெல்லாம் கேட்காதீங்க சார், 'நீ பெண்டாட்டியை அடிக்கிறதை விட்டுட்டியா என்கிற மாதிரியான கேள்வி சார் இது."

மேகலா, மீண்டும் கண்டனக் கணையை ஏவி விட்டாள். "என்னப்பா ஒங்களுக்கு சிரிப்பு வேண்டிக் கிடக்கு? எடுத்துப் போட்ட சமான்களை இருந்த இடத்துல இருத்திட்டுப் போகச் சொல்லுங்க. கூலி கொடுக்கக் காசில்ல."

"என்னம்மா நீ, இன்னைக்குத்தான் நான் கோர்ட்டுக்குப் போகலியே. இருபது ருபாய்ல, ஐந்து ருபாய் சாப்பாட்டுக்கு மீதி இருக்குதே, சாயங்காலம் இரண்டு பேரு நம்மளால பிழைச்சுட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/172&oldid=558779" இலிருந்து மீள்விக்கப்பட்டது