பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 * சத்திய ஆவேசம்

என்பதை எடுத்துக் கூறும் தகவல் களஞ்சியங்களாய் காட்சியளித்தன. மண்டபத்தில் குடிசைவாழ் மக்களுக்கு, தீப்பிடிக்காத வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் வாய்ப்புப் பற்றி செமினாராம். ஒரியண்டலில என்ஜினியாங் அஸோஸியயேஷன்ஸ் ஆப் இண்டியாவின் சிம்போனியாம். ராஜாவில், ஏதோ ஒரு கிராமத்தை தத்து எடுப்பது பற்றி விவாதிக்கும் லயன்ஸ்களின் கூட்டமாம் மினிஸ்டரில் மாடர்ன் பெயிண்டிங் எக்ஸிபிஷன். 'கல்சுரல் டானில் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு அமைச்சர் ஒருவர் கையால் வழங்கப்படும் விருதுவிழா. இன்னும் ஒன்றே ஒன்று. சரஸ்வதியில் அப்பாவுக் கல்லூரியின் வரப்போகும் பொன்விழாவை விளக்கப்போகும் செய்தியாளர்கள் கூட்டம்.

இப்பாடியாகப்பட்ட அந்த ஹோட்டலில், சரஸ்வதி அறை வீணையும், கையுமாய் இருந்த தங்கமுலாமிட்ட வெண்கல சரஸ்வதிதேவி, வெண்தாமரையில் சாந்தம் பூக்க, சிரிக்கிறாள். அவள் காலடி முடியும் இடத்தில் மூன்று மேஜைகளோ அல்லது பலகைகளோ, நேர் வரிசையாய்ப் போடப்பட்டு அவற்றைக் கலர்கலரான விரிப்புகள் மறைத்திருந்தன. இந்த வரிசைக்குப் பின்பக்கம் தேக்கால் செய்யப்பட்ட சிம்மாசன நாற்காலிகள். முன்பக்கம், தொண்ணுற்றொன்பது நாற்காலி கள், மூன்று மூன்றாய், மூன்று வரிசைகளில போடப்பட்டிருந்தன.

டிரஸ்போர்ட் உறுப்பினர்கள், பல்கலைக் கழக செனேட் உறுப்பினர்கள் உட்பட பலப்பல பெரிய மனிதர்கள் குவிந்த வண்ணமாய் இருந்தார்கள். ஒருவரை ஒருவர் எதிரிபோல பார்த்துக் கொண்ட அப்பாவும், அவரது செயலாளர்-மகனும், விஐபிகளை சிரிப்பை வரவழைத்தபடியே சேகரித்தார்கள். அப்பாவு, அவர்களோடு திரும்பும் போது, செயலாளர்-மகனின் மாமனாரும், ஒரு வி.ஐ.பியின் கையை குலுக்கி, அவரை கையோடு கொண்டு வருவதைப் பார்த்தார்.

இந்தச் சமயம் பார்த்து, தாற்காலிக முதல்வரான தமிழாசிரியர் மாணிக்கம் உதறலோடு வந்தார். "என்னய்யா நினைச்சிங்க? யாருக்கோ நடக்கிற கல்யாணம் மாதிரி வாரிங்க" என்று அப்பாவு அவரைப் பார்த்த மெல்லக் கத்தினார். முதல்வரோ அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார். கத்தினால் மானம் போகுமே என்றல்ல. பெண்டாட்டியும், மகளும் கத்தாத கத்தலா? அதுவல்ல. ஆயிரத்தெட்டுக்கும் அதிகமான வழிகளில் கல்லூரிப் பணத்தையும், அரசுகொடுத்த மானியத்தையும், மனம் போன போக்கில் செலவளித்த அப்பாவு, கைபோன போக்கில் கணக்கெழுதிவிட்டு, இப்போது இந்த முதல்வரை கையெழுத்துப் போடச் சொல்கிறார். எல்லாச் செலவும் சரியானதே என்று முதல்வர் கையொப்பமிட வேண்டியது ஒரு சட்டக் கட்டாயம் எப்படிப் போட முடியும்? அவர் சொன்ன படி போட்டால், போலீஸாரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/175&oldid=558782" இலிருந்து மீள்விக்கப்பட்டது