பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 * சத்திய ஆவேசம்

வாடிக்கை ஆசிரியர் சொல்றாரேன்னு சம்மதிச்சேன். என் ரேட்டைத்தான் குறைக்க முடியும் அவங்களோட தேவைகளை குறைச்சால் அப்புறம் என்னைப் பற்றியும் கன்னா பின்னான்னு எழுதிடுவாங்க தீட்டுன மரத்துலயே கூர் பாக்கிறவங்க பிரஸ்காரங்கள காலேஜ் டீச்சருங்கன்னு நினைச்சிட்டிங்க என்ன கரெஸ்பாண்டட் நீங்க. அவனவன்-பெரிய பெரிய தொழிற்சாலை முதலாளிங்க, தலைவருங்க, என் கிட்ட தொங்குறாங்க. நான் இப்போ, தான், என்னடான்னா ஒங்ககிட்ட தொங்குறேன்."

அப்பாவு யோசித்தார். கேவலம், வெளியே தங்கம் போல் மின்னுவதற்காக, இந்தப் பயல்கிட்ட பித்தளை மாதிரி இளிக்க வேண்டியதாப் போச்சே. இவன், என் வீட்டு வாசல் கதவு விலைகூடப் பெறமாட்டான்; இந்த விரட்டு விரட்டுறான். என்ன செய்யுறது? பேய்க்குத் தாலி கட்டினால், பொழப்பு புளியமரத்துலதான்.

அப்பாவு, கெஞ்சுவது போல் கொஞ்சினார். கொஞ்வதுபோல் கெஞ்சினார்.

"இப்போ மட்டும் என்ன ஸார் குடிமுழுகிட்டு? தண்ணி கொடுக்கோமேன்னு கிப்ட் வாங்கல."

"தண்ணின்னு அநாகரீகமாய் சொல்லாதிங்க காக்டெய்ல்னு கெளரவமாய்ச் சொல்லுங்க பிளீஸ்."

"சரி என்னதோ ஒண்ணு. நான் இப்போ என்ன செய்யனும்? "எழுபத்தஞ்சு தெர்மாஸ் பிளாஸ்க்." பேசிய அதிகாரியின் பிரான சிநேகிதியான பெண் அதிகாரி குறுக்கிட்டாள்.

"முந்தா நாள் நடந்த சாதி மாநாட்டுல. பிளாஸ்க் கொடுத்தாச்சே. எழுபத்தஞ்சு பென் லெட், எழுபத்தஞ்சு மலேசிய குடை."

அப்பாவு, எழுபத்தைந்து வயதுக்கும் அதிகமான முதுமையில் தள்ளாடுபவர் போல அல்லாடிக் கேட்டார்:

"எழுபத்தஞ்சு வேணுமா? அதோட ரெண்டு வகை பொருள் கொடுக்கணுமா?"

"நீங்க ஒண்னு இது சிம்பிள். ஒங்க போட்டோ எல்லா பேப்பர்லயும் வரணுமுன்னால் கம்மாவா? அப்புறம் டிரிங்ஸ் எதுக்கெல்லாம் ஆர்டர் கொடுத்திங்க?"

"அது என் மகனோட டிபார்ட்மென்ட். ஜின், விஸ்கின்னு, பிளடிமேரின்று சொல்லிட்டு இருந்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/177&oldid=558784" இலிருந்து மீள்விக்கப்பட்டது