பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 166

"சரி, சீக்கிரமாய் கிப்ட் வாங்கிட்டு வாங்கோ. இன்னும் இரண்டு

நாளையில் என்ன நடக்கப் போவுது பாருங்க. ஒங்க பேச்சும், போட்டோவும், டாப் நியூஸ் பெருமாள்சாமி வாத்தியார் நார் நாராய் கிழிபடுற டபுள் நியூஸ். சரி, சீக்கிரம் சார்."

பெண் அதிகாரியின் மெளனச் சம்மதத்தோடு, அந்த ஆண் அதிகாரி சொல்வதைக் கேட்கக் கேட்க, அப்பாவுவை பப்ளிசிட்டி மோகிணி பற்றிக் கொண்டது. என் போட்டோ பேப்பர்ல வருமா? நான் பேசுறது பிரசுரமாகுமா? இவ்வளவு நாளும் இந்த அதிகாரியும், இந்த சூட்சுமமும் தெரியாமப் போனது எவ்வளவு தப்பாப் போச்சு! அமைச்சர்களை கூப்பிட்டு, காலேஜ்ல மீட்டிங் போட்டேன்னு பேரு. பன்னாடைப் பத்திரிகைப் பயலுவ, என்னை மற்றும் பலர்ல' மறைச்சாங்க. ஆனால், இன்னைக்கு. அடேயப்பா நான்தான் பழைய படியும் டிரஸ்ட் சேர்மனாய் ஆகப் போறேன். பாருடா. என் மவனே. அப்பாவு, அரசாங்க மகனான, அந்த பத்திரிகை தகவல் அதிகாரியிடம் கேட்டார்.

"அப்புறம் டி.வி. வருமா சார்? எவ்வளவு பணமுன்னாலும் பரவாயில்ல சார்."

"உம். பார்க்கலாம்."

"ஏன் ஸார் இழுக்கிறிங்க?" "ஒன்றுமில்ல, அங்கேயும் ஒங்க பெருமாள்சாமி மாதிரி ஒரு பயல் கிடக்கான். அவனை ஒழிக்கிறது வரைக்கும் கொஞ்சம் சிரமம்" "சிரமம்தானே. முடியாதுன்னு இல்லியே. நீங்க நினைச்சால் டி.வி. ஒங்க கதவை வந்து தட்டுமுன்னு கேள்விப்பட்டேன்."

"இப்படி எல்லாரும் சொல்லிச் சொல்லியே கண்ணு பட்டுட்டு அது ஒரு காலம், ஒங்க கல்லூரிப் பொன்விழா வரட்டும். டிவிக்காரனை 'சிங்கோட-அதாவது பேச்சோடோ கவர் செய்யச் சொல்றேன். அதுக்குள்ள, ஒங்க பெருமாள்சாமி மாதிரி பயலும் ஒழிஞ்சுடுவான். ஒழிஞ்சுடவோன். அதுக்குத்தான் இப்போ எல்லா ஏற்பாடும் செய்துட்டு இருக்கோம்'

"பெருமாள்சாமின்னதும் ஞாபகம் வருது ஸார். அவனைப் பற்றி பேப்பர்கள்ல தருமறா செய்தி வரணுமுன்னு சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?" பேப்பர்காரங்க. ஸாரி. பிரஸ்காரங்க அவனப் பற்றி கேள்விக் கேட்க சொல்லிட்டீங்களா.

அவன பற்றித்தான் முதல்லயோ, முடிவாயோ கேட்பாங்க. கவலைப்படாதீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/178&oldid=558785" இலிருந்து மீள்விக்கப்பட்டது