பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 * சத்திய ஆவேசம்

செய்தியாளர்கள், வரத் துவங்கினார்கள். வெற்றிப் பெருமிதத்துடனும் அதே சமயம், செய்தியாளர்கள் ஏடாகோடமாய் கேட்டாலும் கேட்பார்களே என்ற உதறலோடும், அப்பாவு சுற்றியபோது, கோல்டன் கலர் பேண்டும், அதற்கு மேட்சான சட்டையை இன் செய்து, சட்டைக்குமேல் கோட் போட்டு, கழுத்திற்குமேல் டைபோட்ட ஒரு நாசூக்கான சாபிஸ்டிக்கேட்டட்' இளைஞர் முன்னால் வர, தூய வெள்ளை யூனிபாரத்துடன், சிவப்புக் கலர் டவாலியைக் யூனிபாரத்தின் பூணுல் மாதிரி போட்ட சர்வர்கள், பல்வேறு விதமான பாத்திரங்களோடு வந்தார்கள். வந்ததும் வராததுமாய், அந்த அறையின் வாய்க்கால் போலிருந்த வெண்துணி விரித்த மேஜைக்கு அப்பால் போனார்கள். மின்சார அடுப்புக்களுக்கு, கனெக்ஷன் கொடுத்தார்கள். அவற்றில், அடி சிறுத்து துணி விரிந்த எவர்சில்வர் பாத்திரங்களை வைத்தார்கள். பிறகு, துணியால் மூடப்பட்டுக் கொண்டு வந்த அந்தத் தட்டுக்களை ஆங்காங்கே வைத்தார்கள். பல்வேறு விதமான பாத்திரங்கள். கோழித்துண்டுகள், கிரேவியோடு கொதிக்கும், பாக்குநிற மட்டன் துண்டுகள் பாத்திரம், மீன் துண்டுகள் நீந்திய பாத்திரம், டிரை பிஷ்கள் பாத்திரம் இவற்றைத் தாண்டி, பட்டாணி அரிசி, பிரியாணி ஒயிட் ரைஸ், தந்துரி, சப்பாத்தி, பிரிஞ்சியை சுமக்கும் தனித்தனிப் பாத்திரங்கள். இவற்றையடுத்து பொட்டட்டோ, பிரிஞ்ஜால், கோஸ், கேரட் முதலியவைகளைக் கொண்ட வெஜிடேரியன் பாத்திரங்கள்.

இவற்றையும் கண்களால் கஷ்டப்பட்டுத் தாண்டினால், அந்தக் கஷ்டத்திற்குப் பிரதியாக, வெள்ளிப்பனிமலை போன்ற குவியல்-ஐஸ்கிரீம். ஆப்பிள் துண்டுகள் குவியல் தட்டு. ஆரஞ்சுச் சுளைகள் குவியல் தட்டு. இவற்றையும் தாண்டினால், அண்டா மாதிரி ஒரு பாத்திரம், வானவில் நிறத்தில் மின்னியது; புருட் சாலட். சாலட்டையடுத்து, கேஷநைட் தட்டு, ஈரம் போகாத வெள்ளைப் பருப்பும், வெங்காயச் சிதறல்களும் கொண்ட தட்டு விதவிதமான சிகரெட் பாக்கெட்டுகளைக் கொண்ட தாம்பாளத்தட்டு. அப்புறம் காபி பாய்லர். அதனுடன் தோழமை பேசும் டீ பாய்லர்.

முதலில் மற்றும் பலர் வந்தார்கள். அதாவது பிளாக்மெயில் செய்வதையும், கிசுகிசுவை அசிங்கமாய் எழுதும் லும்பன்கள். இந்த சின்னத்தனமான பத்திரிகையாளர்களுக்குப் பிறகு, சின்னச் சின்னப் பத்திரிகையாளர்கள். சிறிதுநேரத்திற்குப் பிறகு தமிழ்ச் செய்தியாளர்கள். அவர்களில் பலர், வேட்டி, சட்டைகள். அதற்குப் பிறகு, அகில உலகத்தையே ஆட்டிப் படைப்பதாக நினைக்கும் ஆங்கிலேய நிருபர்கள். இவர்கள் வந்த பிறகு வந்தவர்கள் ஏஜென்சி நிருபர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/179&oldid=558786" இலிருந்து மீள்விக்கப்பட்டது