பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 6

கொஞ்சனும். நான் வேணுமுன்னா. அவன ஒன் இடுப்புல தூக்கி வைக்கட்டுமா. முதேவியைப் பெத்த மூதேவி..."

"ஏன் இப்டி பிள்ளைய கரிச்சுக் கொட்டுறிங்க? சம்பளப் பணத்தை கொடுத்தால்தான், அப்பனுக்கு பிள்ள. ஆனால் தாய்க்கு எப்பவுமே பிள்ள. நல்லா தெரிஞ்சுக்குங்க."

"இவன் சம்பளத்தை தூக்கி நாய்க்குப் போடட்டும். இவன் எனக்குத் தரவேண்டாம். எனக்கு இவன்தான் தேவையே தவிர. இவன் சம்பளமில்லை. அதுக்காகவும் இவனை படிக்க வைக்கல. நான்தான் கரிக்கோணி சுமக்கேன். இவனும் என்னை மாதிரி கரியாயிடப் படாதுன்னு தானம்மா படிக்க வைக்கேன். இப்போ, கரியாவுறதை விட, இன்னும் கீழே போவேன்னு சாம்பலாய் நிக்கானடி. போன வாரம் ஒன்கிட்டே என்ன சொன்னேன். ஞாபகம் இருக்கா? கோணிய எண்ணுனதுல தப்பு வந்துட்டு. ரெண்டு கோணி அதிகமாயிட்டு. வித்தவன் என்னைப்பாத்து கிழட்டுப் பயலே. வேற தொழில் பண்ணேன்டான்னான். சொன்னவனைப் பாத்து துக்குன கையை கீழே போட்டுட்டேன். யாருக்காவடி? நான் அவனை அடிச்சு. போலீஸ்ல மாட்டி. ஒரு மாசம் ஜெயிலுக்குப் போனா. இவன் காலேஜுக்குப் போவ முடியாதுன்னு தானே? இவனுக்காவ, கூனிக் குறுகி வந்தேன். இவன் என்னடான்னா. என்னை தரையிலே தூக்கிப் போட்டு மிதிச்சுட்டானே. என்னை மிதிச்சாக் கூடப் பரவாயில்ல. தன்னோட வாழ்வையே தரைக்குக் கீழே குழி தோண்டிப் புதைச்சுட்டாளே. இப்போ. இவனையும் காலேஜ்ல இருந்து விலக்கிட்டாங்களாம். இனும. ஒன் மவன, வீட்ல வச்சு அழகு பாரு- நான் மருந்த குடிச்சிட்டு சாகுறேன்."

முத்தையாவின் தந்தை, கோபத்தால் துடித்து, சோகத்தால் துவண்டு, ஆவேசமாக நடக்கப் போனார். கையைப் பிடித்துத் தடுக்கப்போன மனைவியை உதறினார். கீழே விழபோனவள் அவர் தோளையே ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடியிலி ருந்து, அவர் மீண்டும் திமிறப் போனபோது, முததையா, அப்பா என்றான். தன்னை நிமிர்ந்து பார்த்த தந்தையை தயங்கியபடியோ பார்த்தான். பிறகு, அவர் தோளில் தொங்கிய சணல் கயிறுகளை எடுத்துக் கீழேபோட்டுவிட்டு, தன்னை ஒரு காலத்தில் தூக்கியெடுத்த கையிரண்டையும், தன் கரங்களுள் சங்கமமாக்கிக் கொண்டு, தழுதழுத்தக் குரலில் பேசினான்.

"இப்போகூட. நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படறேன். நான் சொல்றதக் கேளுங்க. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன். காலேஜ் பிரின்ஸ்பாலிடம் ஒரு மன்னிப்பு லட்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/18&oldid=558621" இலிருந்து மீள்விக்கப்பட்டது