பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 168

சரஸ்வதி அறை நிரம்பி விட்டது. ஆனாலும், ஒன்றை உன்னிப்பாகக் கவனித்தால் காணலாம். ஆங்கிலப் பத்திரிகை நிருபர்களுக்கும், தமிழ்காரர்களுக்கும் இடையே, பூமத்தியரேகை போல், ஒரு வரையப்படாத போடு போடப்பட்டிருந்தது. இருதரப்பாரும் தனித்தே இருந்தார்கள். தனித்தே பார்த்தார்கள். தங்களுக்குள் மட்டுமே பேசிக் கொண்டார்கள். இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்கார நிருபர்கள், தமிழ்ச் செய்தியாளர்களை கிராமத்துக்காரர்கள், சேரிக்காரர்களைப் பார்ப்பது போல, பிற ஆசிரியர்கள் தமிழாசிரியர்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.

இதற்குள் அரசுப் பத்திரிகை தகவல் அதிகாரி வந்து அப்பாவுவின் காதில் கிசுகிசுத்தார். உடனே அப்பாவு எழுந்து, அறைமுனைக்கு ஒடினார். அப்போதுதான் படியேறி வந்ததுபோல், முச்சிளைக்க நின்ற வேடிக்கை நிருபர்கள், அப்பாவுவிடம் முறையிட்டார்கள்.

"மிஸ்டர் அப்பாவு எங்க எம்.டி. ஒங்ககிட்ட ஒரு தகவல் சொல்லச் சொன்னார். பெருமாள்சாமி, ஹைகோர்ட்டுக்கு அப்பீல் முனுவை தாக்கல் செய்திருக்காராம்."

"அய்யய்யோ, இதோட ஒழிஞ்சான்னு நினைச்சேன்." "அவனாய் ஒழியாட்டி, நாமாய் ஒழிக்கனும்" "எப்படி?” "இந்த பிரஸ்கான்பரன்ஸ்ல பெருமாள்சாமி ரெய்டை பற்றி நீங்க சொல்லணுமாம்."

பத்திரிகை அதிகாரி குறுக்கிட்டார். "டோண்ட் ஒர்ரி. நீங்க சொல்றதுக்கு முன்னாலயே ஏற்பாடு செய்தாச்சே. சரி. உட்காருங்க."

செய்தியாளர் கூட்டம் துவங்கியது. அப்பாவு எழுந்து, தன் கல்லூரியின் ஐம்பதாண்டுகால வரலாற்றை விளக்கப் போனார். செய்தியாளர்கள், அவர் பேச்சைக் கேட்க விரும்பாதது போல், இரைச்சல் போட்டார்கள். அப்பாவு, வாயை நிறுத்தியபோது, பிரஸ் அதிகாரி "நீங்க பேசுங்க. பிரஸ்ல சிகரெட் கேட்கிறாங்க. அவ்வளவுதான்' என்று ஓடிவந்து கிசுகிசுத்துவிட்டு, பெண் அதிகாரியை, சிகரெட் புஷ்டியாகப் பார்த்தார். உடனே அந்த அம்மாப் பொண்ணு, தானே சிகரெட்டுகளை விநியோகித்தார். அப்பாவு பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/180&oldid=558787" இலிருந்து மீள்விக்கப்பட்டது