பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 * சத்திய ஆவேசம்

உரை நகல்களும், நிருபர்கள் கூட்டத்தில் விநியோகிக்கப் பட்டன. அவர்கள், ஒரு கையால் அந்த நகலைப் பிடித்து வைத்துக்கொண்டு, அதன் மேலேயே சிகரெட் புகையை ஊதினார்கள். இதற்குள் அப்பாவு பேசிமுடித்து உட்கார்ந்தார். பின்னர் பிரஸ் அதிகாரி, ஏற்கெனவே சொல்லிக் கொடுத்ததுபோல் "எனி கொஸ்டின் என்றார்.

செய்தியாளர்கள், செட்டில் ஆனார்கள். அப்பாவுவை, அன்போடு பார்த்தார்கள். அப்பாவு, பெருமை பிடிபடாமல் மீண்டும் எனி கொஷ்டின் என்றார். பதிலில்லை. இரண்டாவது தடவையாகவும் கேட்டார். கேட்கப் பட்டவர்களின் பார்வை வேறுபக்கம் விழுந்தது. அதாவது பாட்டில்கள் மீது. பிறகு அப்பாவுவே பேசினார்.

"ஒரு நல்ல செய்தி சொல்லப் போறேன். சென்னைப் பல்கலைக் கழகம் நூற்றாண்டு விழா கொண்டாடுவதை முன்னிட்டு, எங்கள் கல்லூரி நிர்வாகம் ஐந்து லட்சம் ருபாய் நன்கொடை வழங்கும்."

செய்தியாளர்களில் சிலர் கை தட்டினார்கள். அவர்களோடு சேர்ந்து கைதட்டிய டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்கள், தட்டிய கைகளை தடவிக் கொண்டார்கள். போர்ட்ல தீர்மனாம் போடல, அப்படி ஒரு எண்ணமே இல்ல. அப்பாவு எப்படி ஐந்து லட்சம் கொடுக்கிறதாய் சொல்லாம்? செயலாளர் மகன், அப்பன்மேல் அங்கேயே எகிறப் போனார். பிறகு நாசூக்காகப் பற்களைக் கடித்தபடி, இதர டிரஸ்ட் உறுப்பினர்களையும், சம்பந்தா சம்பந்தத்தோடு வந்திருந்த மாமனாரையும் பார்த்துக் கொண்டார்.

செய்தியாளர்கள், எழுந்திருக்கப் போனார்கள். அப்பாவு, பிரஸ் அதிகாரியை, ஒரு மாதிரியாகப் பார்ததார். உடனே, அந்த அதிகாரி ஒரமாக உட்கார்ந்திருந்த ஒரு செய்தியாளரின் காதில் எதையோ போட்டார். உடனே அவர், அதை வாய் வழியாகத் துப்பினார்.

"மிஸ்டர் அப்பாவு! கடைசியாய் ஒரே ஒரு கேள்வி. எல்லாரும் உட்காருங்கப்பா. ஒங்க பழைய பிரின்ஸ்டால் பெருமாள்சாமி பெண் லோலன்னு ஒரு பேச்சு அடிபடுதே? ஊழல் பெருச்சாளியமே. உங்க கருத்து என்ன?

"மன்னிக்கனும். பெர்ஸனல் விவகாரம் எதுக்கு?"

"அப்படிச் சொல்லப்படாது. ஒரு பழைய காலேஜோட பேர் புதுசா கெடுது பாருங்கோ. சும்மா சொல்லுங்க. ஒங்க பெயரை நாங்க வெளியில் சொல்லமாட்டோம். எல்லோர் சார்பிலேயும், இதை நான் தெரிவிக்கிறேன். அவர் காதல் விவகாரத்துல சிக்கினவர்னும் ஒரு ருமர். இன்கம் டாக்ஸ் ரெய்ட் நடக்கிற அளவுக்கு, அப்படி என்னதான் செய்தார்? சொல்லுங்க சார்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/181&oldid=558788" இலிருந்து மீள்விக்கப்பட்டது