பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(21)

பதினைந்து நாட்கள் தொலைந்தன.

மேகலா வசாற்கதவை பாதிமூடி, அதன்மேல் மோவாயை வைத்தபடி, அந்த கிராஸ் தெருவிற்கும், அப்பாஸ் அவென்யூவிற்கும் இடையே கண் செலுத்தினாள். கண்ணுக்குத் தெரியாத பல்லவ பஸ் சத்தங்களை காதுகள் வாங்கும் போதெல்லாம், கால்கள் முன்னோக்கி நகர்ந்தன. தந்தை ஏதோ ஒரு பஸ்ஸில் இருந்து இறங்கி, பஸ் நிலையத்தில் இருந்து தெருமுனைக்கு வந்து சேர்வதற்காக, ஏழெட்டு நிமிடங்களை ஒதுக்கியபடி, கதவை முன்னாலும் பின்னாலும் நகர்த்துவதும், அப்புறம் வெளியே எட்டிப் பார்ப்பதும், அப்படியும் அவரைக் கண்டு பிடிக்காமல், கதவைத் தாழிட்டுக் கொள்வதும், பிறகு ஐந்து நிமிடம் கழித்துத் திறப்பதுமாக இருந்தாள். இப்படிப் பல தடவைகளில் ஒரு தடவை, அவள் வெளிப்பட்டபோது, எதிர் வீட்டுக்காரி அவளை இளக்காரமாகப் பார்ப்பது போலிருந்தது. முன்பெல்லாம் சகஜமாகப் பேசும் அந்த மாதரசி, இன்கம்டாக்ஸ் ரெய்டிற்குப் பிறகு மேகலாவிடம் பேசுவதையே விட்டுவிட்டாள். ஒய்வு கிடைக்கும் போதெல்லாம், தான் வைத்திருக்கும் சொத்துப் பத்துக்களையும், சுகபோகங்களையும் வாயால் அளந்து காட்டுவதற்காக வரும் அவளோ, இப்போது இவளை கண்களால் அளவெடுப்பது போல் கடுகடுத்து ஏற இறங்கப் பார்த்தாள். மேகலா கதவைத் திறந்து, வாசல் முனைக்கு வந்தபோது, காய்கறி வண்டிக்காரரிடம் நிறைய வாங்குறதுக்கு நாங்க என்ன கள்ளப்பணமா வச்சிருக்கோம் என்றாள். இவர்மீது ஒரக்கண் போட்டபடியே.

மேகலா, பொருமினாள். யாராவது ஒங்க வீட்டில் என்ன நடந்தது? என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். அப்போது, அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்து பாரத்தை இறக்கி வைக்கலாம். அதை விட்டுவிட்டு தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல், முகங்களை, பலாப்பழம்போல் கரடுமுரடாக்கியபடி அவர்கள் நடப்பதும், கடப்பதும் அசல் அடாவடித்தனமானது.

மேகலா, வீட்டிற்குள்ளேயே தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டாள். சிறிது நேரத்தில், கதவு தட்டப்பட்டது. மேகலா, என்னப்பா ஆச்சு என்று சொன்னபடியே கதவைத் திறந்தாள். அப்புறம் முகத்தை அகலப் பண்ணினாள். முத்தையா, கையில் நான்கைந்து தினசரிப் பத்திரிகைகளோடு நின்றான். அவளைப் பார்த்து, வழக்கம் போல் புன்னகைக்காமல், வீட்டுக்குள் வந்து, ஒரு நாற்காலியில் தொப்பென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/183&oldid=558790" இலிருந்து மீள்விக்கப்பட்டது