பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 172

விழுந்தான். மேகலா, கதவைப் பாதி முடிவிட்டு, அவனிடம் வினாமுகத்தோடு வந்தாள். முத்தையா, அவளைப் பார்க்காமலும், பதிலளிக்காமலும் கையில் இருந்த பத்திரிகைகளை, தரையில் வீசியடித்தான். அவள், அவனை வினோதமாகப் பார்த்தபடியே, கீழே விழுந்த பத்திரிகைகளை ஒழுங்குப்படுத்தப் போனாள். ஒரு பத்திரிகையின் கொட்டை எழுத்து தலைப்புச் செய்தியை பார்த்துவிட்டு, அவள் குமைந்து உட்கார்ந்தாள். அதனை அகலப் பிரித்து, ஆழமாக கண்வூன்றினாள். படிக்கப் படிக்க, அவள் கண்கள் இருண்டன. காதில் பேயிரைச்சல் கேட்டது. உயிர்க்கொல்லிபோல் உப்பிக் கிடந்த அந்தப் பத்திரிகையை, மேலிருந்து கீழாய், கீழிருந்து மேலாய் பார்த்தாள்.

முன்னாள் கல்லூரி முதல்வர் வீட்டில் ஐந்து லட்சம் ருபாய் கள்ளப் பணம் கள்ளக் காதல் கடிதங்கள்!! வருமானவரி சோதனையில் திடுக்கிடும் தகவல்கள். டிசமபர், 31-சென்னை. (எமது விஷேச நிருபர்) வடசென்னை கல்லூரி ஒன்றில், ஏழுமலையானின் இன்னொரு பெயரைக் கொண்ட கல்லூரி முதல்வர், சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். என்றாலும் நிர்வாகம், தன் பாரம்பரியம் மிக்க கல்லூரிப் பெயரைக் கட்டிக் காப்பதற்காக, அவர் செய்த தில்லுமுல்லுகளை இதுவரை பகிரங்கப் படுத்தவில்லை. ஆனாலும், வருமானவரி அதிகாரிகள், அயராத கண்காணிப்பிற்குப் பிறகு, மலை விழுங்கியும், தோலிருக்க சுளை விழுங்கியுமான இந்த ஆசாமியின் வீட்டை, சமீபத்தில் சோதனையிட்டு, பல திடுக்கிடும் ரகசிய தஸ்தாவேஜுகளையும், பத்து லட்சம் ருபாய் கள்ளப் பணத்தையும், தங்க நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த ஆசாமி பல்வேறு மோசடிகளுக்காக, போலீஸாரால் எந்த நேரத்தலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பொம்புளக் கள்ளன்

"இவை தவிர, இவர் முன்று லட்சம் ருபாயில் கட்டியிருக்கும் வீட்டின் பத்திரமும், பல கம்பெனிகளில் பங்குகள் வாங்கியிருப்பதற்கான தஸ்தாவேஜுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. வீட்டின் மதிப்பு, பத்திரத்தின்படி மூன்று லட்சம் ருபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதன் மதிப்பு பல லட்சம் பெறுமாம். வருமானவரி இன்சினியரிங் ஸ்கோட் இப்போது இதன் நிஜமான மதிப்பை எடைபோட்டு வருகிறது. லாக்கரில் வைக்கப்பட்ட நகைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/184&oldid=558791" இலிருந்து மீள்விக்கப்பட்டது