பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 * சத்திய ஆவேசம்

ஆய்வு செய்யப்பட்டு, இவை வாங்கப்பட்ட பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரையும், அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்."

இன்னொரு திடுக்கிடும் செய்தி. கல்வியுலகமே தலை கவிழ வேண்டிய சங்கதி. சோதனையின்போது, கல்லூரி முதல்வருக்கு வந்த பல காதல் கடிதங்கள் சிக்கினவாம். இவர், எவளோ ஒருத்திக்கு, அரைகுறையாக எழுதி வைத்திருந்த இன்லான்ட் கடிதத்தையும், அதிகாரிகள் இதர கடிதங்களுடன் கைப்பற்றியிருக்கிறார்கள். பொதுவாக வ.அதிகாரிகள் பிறர் காதல் விவகாரங்களில் தலையிடுவது இல்லையென்றாலும், இந்த ஆாசமி, ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண்களிடம், கள்ளப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், இந்தக் கடிதங்கள், அதிகாரிகளின் கைக்கு வந்துள்ளன. இந்த மனிதர் முதல்வராகப் பணியாற்றிய கல்லூரியில் கோ-எஜூகேஷன் (அதாவது பருவப் பெண்களும், வாலிபர்களும் சேர்ந்து படிப்பது இல்லை. விசாரித்துப் பார்த்ததில், இந்த கதாநாயக-வில்லன், மனைவி இறந்தபின் மறுமணம் செய்யாமல் இருந்ததற்குக் காரணம் இருக்கிறது. மனைவி தட்டிக் கேட்பாளே. கட்டினவனுக்கு ஒரு வீடு. கட்டாதவனுக்குப் பல வீடுகள் என்ற தத்துவத்தில் இந்த ஊழல் மன்னருக்கு கண்மூடித்தனமான நம்பிக்கையாம்.

மேகலா, இதரப் பத்திரிகைகளைப் படிக்காமல், அவற்றின் தலைப்புச் செய்திகளிலேயே தடுமாறினாள்.

கள்ளப் கணமோ. கள்ளப்பணம்

'போதித்தது பொருளாதாரம்-சாதித்தது கள்ளக்காதல்.”

"வேலியே பயிரை மேய்ந்த கதை."

மேகலா, கைப்பிடித்த பத்திரிகைகளை வீசியடித்துவிட்டு, சுவரில் நின்றபடியே அதற்கு முட்டுக் கொடுப்பதுபோல் சாய்ந்தாள். விழிகளை உருட்டாத கோலம். ஒரு கண், இன்னொரு கண்ணைப் பார்ப்பது போன்ற ஒடுங்கிய பார்வை; முத்தையாவும் எழுந்து அவளருகே போய் நின்று, "மேகலா மேகலா என்றான். கொஞ்சம் கொஞ்சமாய், குரலைக் கூட்டிக் கொண்டே கேட்டான். அவளோ, அவன் குரல் எட்டாத இடத்திற்கு, அவன் பார்வையில் படமுடியாத தொலைவிற்குத் தொலைந்து போனவள்போல் நின்றாள்.

முத்தையா, முன்னாலும், பின்னாலும் நகர்ந்தபடியே சபதமிட்டான். "போராடுறது வரைக்கும் போரா டிப் பார்ப்போம். முடியாவிட்டால், இந்தச் செய்தியில் சம்பந்தப்ட்ட ஒருத்தனையாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/185&oldid=558792" இலிருந்து மீள்விக்கப்பட்டது