பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 174

குத்திக் கொல்லப் போறேன். கழுத்து வேறு தலைவேறாய் ஆக்கப் போறேன். இதனால போலீசிஸ் கைதாகி, கோர்ட்ல விசாரணை வரும. அப்போ என் ஆசான் பட்ட பாட்டையும், அவர் மகள் பட்ட பாட்டையும் விளக்கி, கொலைக்கான காரணத்தைச் சொல் வன். அப்போ இரண்டு பத்திரிகையாவது பேராசிரியரைப் பற்றி, நான் கொடுக்கும் விவரங்களை வெளியிடாமலா இருக்கும்? மேகலா ஏன் அப்படி என்னைப் பார்க்கிறே? நான் சொல்றது சத்தியம். என்னை நம்பும்மா. மேகலா. மேகல்."

முத்தையாவையே ஏறிட்டுப் பார்த்தபடி நின்ற மேகலாவின் விழிகளில், மெள்ள மெள்ள நீர் சுரந்தது. அவள் விழியாட்டாது பார்த்தபடியால், கண்ணிர் அணை நீராய், விழிகளிலேயே தேங்கி நின்றது. அவ்வளவுதான், மேகலா, அவன் கழுத்தில் கைகளை கோர்த்துக்கொண்டு, அவன் மார்பில் சாய்ந்தாள். அவள், கொலை செய்யப் போய்விடக் கூடாது என்பதுபோல், அவனை ஆரத் தழுவிக் கொண்டு, முதுகை, உடும்புபோல் பற்றியபடி, விம்மினாள். கேவினாள்.

மேகலா, அவளிடமிருந்து விடுபட்டு, ஒரு வாலிபன்மேல், அப்படி சாய்ந்த உணர்வற்று உள்ளங்கைகளில் முகம் ஊன்றினாள். அவ்வப்போது, கூரையையும், பத்திரிகைகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டாள். முத்தையாவும் மெளனியாகி, மனதிற்குள் பேசிக் கொண்டான். பத்திரிகைகளின் பாதிப்பில், இருவரும் பாதியாட்களாய் உடலாய் சுருங்கி உள்ளத்தால் கசங்கிப் போனார்கள். கால, நேரத்தைக் கடந்தவர்களாய், அவர்கள், அதைக் கடத்திக் கொண்டிருந்தபோது, பாதிக் கதவு வழியாக, வழக்கத்திற்கு விரோதமாய், பேராசிரியர். பெருமாள்ாசமி, பூனைமாதிரி வந்து நின்றார். முத்தையாவும், மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர, பேராசிரியரைப் பார்க்கவில்லை. அவரோ, ஆனந்தக் கூச்சலிட்டார்.

"அடடே... முத்தையாவா... பிளிஸ் கன்கிராஜுலேட் மீ... இன்றைக்கு அப்பீல். மனு, ஹைகோர்ட்ல விசாரணைக்கு போஸ்ட் ஆயிட்டு. நெக்ஸ்ட் வீக் விசாரணை இருக்குமாம். அடேயப்பா! இதுக்கு நான் பட்டபாடு." கிளார்க் பசங்க இன்னைக்கும் என்னை டபாய்க்கப் பார்த்தாங்க. மனுவை ஜட்ஜ்கிட்டே காட்டாமலே வச்சுருந்தாங்க. கேட்டால், மெட்ரோ மாஜிஸ்டிரேட் தீர்ப்போட நகலுல, முத்திரை சரியாய் விழலியாம். என் கையெழுத்து இரண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு வித்தியாசமாய் இருக்குதாம் எனக்கு வந்ததே கோபம். யோவ். நான் காசு கொடுக்கலன்னு பேப்பரை நகர்த்தாமல் ஒரு வாரம் வச்சது நியாயம். அதுக்குமேல் வைக்கிறது அநியாயமய்யா. எனக்குப் பின்னால வந்த மனுக்கள மட்டும் கொடுத்திட்டீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/186&oldid=558793" இலிருந்து மீள்விக்கப்பட்டது