பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 * சத்திய ஆவேசம்

இன்றைக்கு ரெண்டுல ஒன்று தெரியணும். நானே. ஜட்ஜ சேம்பர்ல சந்திச்சு. நீங்க சம்திங்காய் என்னைப் பார்க்கிறதைச் சொல்லப் போறேன். அவரோட சேம்பர் எங்கேய்யா இருக்குதுன்னு போட்டேன் ஒரு போடு, பயல்க அரண்டுட்டாங்க. நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னாங்க. ஒன் ஹவர் வெயிட் சார். பிளிஸ்: ஏகப்பட்ட ராஜமரியாதை அவங்க சொன்னது மாதிரியே, மனுவில அடுத்தவாரம் வென்னஸ்டேய் ஹியரிங்குக்கு எடுத்துக்க ஜட்ஜ்கிட்டே உத்திரவு வாங்கிட்டாங்க. முன்னால... என்னைப் புழுவைப் பார்க்கிற புலி மாதிரி பார்த்தவங்க, இன்னைக்கு புலியைப் பார்க்கிற புழு மாதிரி நெளிஞ்சாங்க. இதுல இருந்து என்ன தெரியுது? சொல்லுங்க பார்க்கலாம்."

பேராசிரியர், மகளையும், மாணவனையும் இறங்கிப் பார்த்தார். அவர்களோ குனிந்த தலை நிமிராமல் இருந்தார்கள். ஆனாலும், அவர் உற்சாகம் குறையாமலே தொடர்ந்தார்.

"இதுல இருந்த என்ன தெரியுதுன்னா, உருட்டி மிரட்டி அதிகாரத்தை தப்பாய் பயன்படுத்தி காசு பறிக்கிற பசங்க. மனசுக்குள்யே நிசமாவே கோழைப் பயலுங்க. லேசாய் மிரட்டினால் போதும். தலையைப் பிடித்த கையை எடுத்து, காலைப் பிடிப்பாங்க. வாத்துங்க கூட்டமாய் போகும்போது, வேட்டைக்காரன் சும்மா ஆகாயத்தை நோக்கிச் சுட்டால் போதும். டுமீல்னு சத்தம்கேட்டு எல்லா வாத்துக்களும், "நாம செத்துட்டோம் போலுக்குன்னு சுருண்டு தரையில தானா விழுமாம். இதுமாதிரிதான் ஊழல் பேர்வழிங்க, வாத்துப் பசங்க ஏதாவது ஒருவனுக்கு ஒண்ணுன்னா, மொத்தமா பொத்துன்னு விழுந்திடுவாங்க. ஆமா, என்ன வந்தது ஒங்களுக்கு? என்னை ஏன் கன்கிராஜூலேட் பண்ணல? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? வாட் ஹேப்பண்ட் டு யூ?

மேகலாவும், முத்தையாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவள் சொல்லட்டும் என்று இவனும், இவன் சொல்லட்டும் என்று வஅளும் போட்டி போட்டார்கள். அப்பாவைப் பார்த்த மேகலா, அவர் கண்கள், தன்னைச் சந்திக்க போனபோது, தலையைத் தாழ்த்திக் கொண்டாள். இதற்குள் பேராசிரியரே, யார் பேப்பர் வாங்கிட்டு வந்தது என்று சொன்னபடியே ஒரு பத்திரிகையை எடுத்து சாவகாசமாகப் படித்தவர், தலையை குலுக்கினார். பைக்குள் இருந்த கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டார். படித்ததை கீழே போட்டுவிட்டு, இன்னொன்றைப் பிரித்தார். இருபது நிமிடம் கழித்து, எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, பொத்தென்று நாற்காலியில் விழுந்தார். சத்தம்கேட்டு, மேகலா, கைகளை விலக்கிப் பார்த்தாள். சப்பாணிபோல் தரையில் தவழ்ந்தபடியே, தந்தையை நோக்கி நகர்ந்து, அவர் மடியில் தலைபோட்டு, குலுங்கினாள். பேராசிரியரோ, கண்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/187&oldid=558794" இலிருந்து மீள்விக்கப்பட்டது