பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 * சத்திய ஆவேசம்

மேகலா, வாசலுக்கு முதுகுகாட்டி, தந்தைக்கு முகம் காட்டி நின்றபடி கர்ஜித்தாள்.

"என் உயிரைக் கொடுத்தாவது உண்மையை நிலை நாட்டுறேன். எந்தப் பத்திரிகை ஆபீஸ் முன்னாலாவது, உண்மையை வெளியிடும்படி, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்."

முத்தையா, பேராசிரியருக்கு அருகே வந்தான். எங்கேயோ புறப்பட்டுப் போவதுபோல், ஒரு காலை முன்வைத்தபடி உரத்துக் கூவினான்.

"அப்பாவுவையும், இந்த பத்திரிகைக்கார பயல்களுல ஒருத்தனையாவது நான் கொலை செய்யப் போறேன். இந்தப் பயலுகள விடபோறது இல்ல... பயங்கரவாதிங்க எப்படி உருவாகுறாங்க என்கிறது எனக்கு இப்போதான் நல்லாவே புரியுது. விடமாட்டேன் சார்."

பேராசிரியர், மெள்ள மெள்ளக் கண் விழித்தார். கண்களைத் திறந்து போட்டாலும், அவருக்கு, மகள் எது, மாணவன் எது என்று தெரியவில்லை. ஒருவேளை குருடாகி விட்டோமோ என்று கண்களைக் கசக்கிப் பார்த்தார். எதிரே தோன்றிய இருவரின் உருவங்களும, அப்படியும் மங்கலாய்ததான் தெரிந்தன. சிறிது நிதானப்பட்டு, அந்த இளைய தலைமுறையினரை, கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர் போல் பேசினார்.

"சரி. நடக்கட்டும். நடத்தட்டும். வாழ்க்கையை பரீட்சை செய்து பாத்துட்டால் போச்சு. பாவிப் பயலுவ பரீட்சைப் பேப்பரை திருத்துறதுக்கு, காசு வாங்குவதாய் கூசாம எழுதிட்டாங்களே பாரு முத்தையா நம்ம காலேஜ்ல பரீட்சையில கால் மார்க், அரை மார்க் போடுற கஞ்ச புரபசர்னு எனக்குப் பேரு என்னைப் போய்."

"என்னப்பா நீங்க? முத்தையா ஒங்களை சந்தேகம் படுறது மாதிரி பேசுறிக்?"

"இவ்வளவு பத்திரிகைங்க எழுதும்போது, யாருக்கு வேணுமுன்னாலும் சந்தேகம் வரும் ஏன். இப்போ. எனக்கே, என் மேல சந்தேகம் வருது. இது அச்சடித்த எழுத்தோட பலம் அடேய் பாவிங்களா ஒங்க கை அழுகிப் போகுண்டா. நானாடா ஸ்திரிலோலன்? காலேஜில படிக்கும்போது, எனக்கு லவ் லட்டர் எழுதுன பெண்ணுக்கு புத்திமதி சொல்லி, அந்த லட்டரை அவள் அப்பன் கிட்டேயும் காட்டுனவண்டா நான் நானாடா..

"ஏம்பா புலம்பனும்? இந்த பத்திரிகையில ஏது.ாவது ஒரு பத்திரிகை ஆபீஸ் போய் ரெய்டுகாரன் கொடுத்த பஞ்சனாமாவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/189&oldid=558796" இலிருந்து மீள்விக்கப்பட்டது