பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 178

காட்டி உண்மையை வெளியிடச் சொல்வோம். போடாட்டால் அங்கேயே உயிரை விடுவோம் புறப்படுங்கப்பா."

“வேண்டாம்மா. பத்திரிகை தர்மம் என்கிறது, இரு தரப்பையும் விசாரிச்சு, இரண்டு பேர் வாதங்களையும் தன்னோட கருத்தையும் சேர்த்துப் போடணும். இதுதான் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம். இந்தப் பசங்க, என்கிட்டே ஒரு வார்த்தை கேட்காமல், என் ரத்தத்தையே மையாக்கிட்டாங்க. இவங்க முகத்துல விழிக்கிறதே பாவம், வேண்டாம்."

முத்தையா, ஆற்றுப் படுத்தினான். "சார் எனக்கு ஒரு யோசனை. எல்லாப் பசங்களும், வருமானவரி அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டித்தான் எழுதியிருக்காங்க. நாம் ஏன் வருமானவரி தலைமை அதிகாரியைப் பார்த்து இதுக்கு மறுப்பு அறிக் வெளியிடும்படி சொல்லச் து? இன்கம்டாக்ஸ் - எல்லா பிரஸ்காரனும் போடுவான்."

“எனக்கு நம்பிக்கையில்ல. என்னோட பெயர் நீத்தார் நினைவுலதான் வருமுன்னு நினைச்சேன். இந்த பேஸ்ட்டர்ட்ஸ், நான் சாகாமலே, என் மகள் விளம்பரம் கொடுக்காமலே, எனக்கு உயிரோட சமாதி சட்டிட்டாங்க பாரு."

பேராசிரியர். பெருமாள்சாமி நிமிர்ந்து உட்கார்ந்தார். "சரி. பஞ்சனாமாவா... பாடாதிநாமாவா...அந்த்..." என்று பேசியவர், வாசலில் ஒரு காலை வளைத்து நடந்து, தயங்கி நின்ற தாடி முளைத்த ஒருவரைப் பார்த்து "யாரு?" என்றார். எதேச்சையாக திரும்பிய முத்தையா, அப்பா என்றான். மேகலா, வந்தவர் சிரமப் பட்டு நடக்கக் கூடாது என்பதற்காக, ஒரு நாற்காலியை கொண்டுவந்து வாசலருகே போட்டுவிட்டு "இது நம்ம முத்தையாவோட அப்பாப்பா. வாங்க, உட்காருங்க" என்றாள்.

பேராசிரியர் எழுந்து நின்று கரங்குவித்தார். பிறகு, அவரை இருகரம் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு "பாவம் இந்தக் காலோடு ஏன் கஷ்டப்பட்டு வந்தீங்க?" என்று சொன்னபடியே, முத்தையாவை கண்டிப்போடு பார்த்தார்.

வந்தவர், அமைதியாகச் சொன்னார். "நான் அவனை கூப்பிட வர்ல. ஒங்களைப் பார்க்கத்தான் வந்தேன். முத்தையா வாங்குன பேப்பர்ல, ஒண்ணு எங்க வீட்ல கிடந்தது. எழுத்துக் கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். போக்கிரிப் பயலுவ, ஒங்களை மாதிரி தர்மதுரையை, இப்டி எழுதியிருக்காங்க பாரு, அதனால ஆறுதாலாப் பார்த்துடடுப் போகலாமுன்னு வந்தேன். அய்யா. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/190&oldid=558797" இலிருந்து மீள்விக்கப்பட்டது