பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179. * சத்திய ஆவேசம்

படிக்காதவன். ரொம்பச் சின்னவன். ஒங்களுக்குக் கையாலேயோ மூளையாலேயோ உதவ முடியாதவன். ராமபிரான்கிட்ட, அணில் காட்டு ைஅன்பு மாதிரி காட்டத்தான் தெரியும். இந்தப் புறம்போக்குப் பயலுவ எழுதுனதைப்பற்றி அய்யா பெரிசாய் எடுக்கப்படாது. இவனுவ, பெத்ததாயும், கட்டுன பெண்டாட்டியும் செய்யுற தப்புத்தண்டாக்களை ஒரு அப்பாவிப் பெண்மேல போட்டு எழுதுறவனுவ, ஒங்களுக்கு ஒரு குறையும் வராது:

பேராசிரியர், விம்மிப்புடைத்து அவரைக் கரங்களால் பிடித்துக் கொண்டார். பிறகு இந்த நாட்ல எல்லாப் பாடங்களுக்கும் காலேஜ் இருக்கு. ஆனால் மனிதாபிமானத்துக்குத்தான் காலேஜ் இல்ல. அப்படி ஒரு காலேஜ் வந்தால், அதுல பிரின்ஸ்பாலாய் இருக்க ஒங்களுக்குத்தான் தகுதி உண்டு. இதைப் புகழ்ச்சிக்காகச் சொல்லல. அந்த காலேஜ்ல இருபது வருஷமாய் மாரடிச்சேன். எவன் கிட்டேயும் வம்பு தும்புக்குப் போனது கிடையாது. அப்படி இருந்தும் வாத்தியார் பயலுவ ஒருத்தன் கூட எட்டிப் பார்க்கல. ஆனால் முன்னப் பின்ன தெரியாத நீங்க, கஷ்டப்பட்டு வந்து என்னைப் பாக்கறிங்க, நிங்க கால் ஒடிஞ்சு கிடந்தப்போ, நான் வந்து பாத்திருக்கணும்."

"அய்யா கஷ்டத்துல இதை எப்படி எதிர்பார்ககது? ஒடிஞ்ச காலை நிமிர்த்திடலாம். வளைஞ்ச மானத்தை நிமிர்த்துறதுதான் கஷ்டம். இந்தக் கஷ்டத்துல இருந்து எப்படியும் நீங்க மீண்டாகணும். வாத்தியாருங்க வராததுக்கு அய்யா வருத்தப்படக் கூடாது. ஒருவேளை மனசுக்குள்ளேயே அவங்களுக்கு அனுதாபம் இருக்கும். பயத்துல வராமல் இருக்கலாம். இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறது. பெரிசுல்ல; அதைக் கட்டிக் காப்பதுதான் முக்கியமாய் போச்சு. வேலையை விடுறது, உயிரை விடுறது மாதிரி ஆயிட்டு:

"அதுக்காக ஒருத்தனுக்குக் கூடவா தன்மானம் இல்ல? "ஒருவேளை, தன்மானம் அதிகமானதும், வராததுக்கு ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்க, வம்பு தும்புக்குப் போகதவர்னு சொன்னிங்க. அப்படின்னா அவங்க கஷ்ட நஷ்டத்துல நீங்க பங்கெடுக்கலன்னு ஆகுது. அதனால அவங்களை, நீங்களும் நம்ம கஷ்டத்துலர பங்கெடுக்கணுமுன்னு எதிர்பார்க்கக் கூடாது. அய்யா, நான் படியாதவன்; தப்பாய் பேசியிருந்தால் மன்னிக்கணும்."

பேராசிரியர், அவரை, ஆச்சரியமாக பார்த்தார். இவ்வளவு நாளும் நானே சிந்திக்காத ஒரு மெய்யான விஷயத்தை எப்படிச் சொல்லிட்டார் படிக்கிறவன் முளை, தண்டவாளத்துல ஒடுற ரயில் மாதிரி. ஒரே தடந்தான், அதுக்குத் தெரியும். ஆனால் படிக்காதவன் மைன்ட், பிரச்சனையை பலவழியில் சிந்திக்குமுன்னு, அந்தக் காலத்துல அப்பா சொன்னது எவ்வளவு பெரிய உண்மை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/191&oldid=558798" இலிருந்து மீள்விக்கப்பட்டது