பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 182

கமிஷனரின் பி.ஏ. அறைக்குள் இருவரும் பிரவேசித்தார்கள். அந்த நேர்முக உதவியாளர், என்ன என்று கேட்டபோது, பேராசிரியர், பயங்கரமாய் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்த ஆசாமி, அவர் முகத்தைவிட்டு விட்டு, ஒரு பைலை பார்க்கக் குனிந்தபோது பேராசிரியர் பேசினார்.

"சீப் கமிஷனரை நான் பார்க்கணும்." "அப்பாய்மென்ட் வாங்குனிங்களா?

"அதுக்கு டயம் இல்ல." "இவருக்கும் டயம் இல்ல. ரொம்ப பிஸ்ஸி" "பெருமாள்சாமி வந்திருக்கான்னு சொல்லுங்க." "ரெட்லைட் எரியுது, உள்ளே போகக் கூடாது."

"நீங்க போய் பெருமாள்சாமின்னு சொல்லுங்கய்யா. உடனே பச்சை விளக்கு எரியும்."

‘பி.ஏ. யோசித்தார். இவர் ஒருவேளை இன்டெலிஜண்ட் அதிகாரியோ? சி.பி.ஐ. அபிஷியலோ? மாறுவேடம் போட்டு வந்த மத்திய மந்திரியோ? உள்ளே ஒடினார். ஒரு நிமிட நேரத்தில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தார்.

“என்ன சார் நீங்க? பெரிய வி.ஜ.பி. மாதிரி சொல்லி அனுப்பிட்டிங்க அவர் கத்துறார். எதுன்னாலும் எழுதிக் கொடுத்துட்டுப் போகச் சொல்றார்:

பேராசிரியருக்கு, சப்தநாடிகளும் கொதித்தன. பி.ஏ.வை. முறைத்தபடி, கமிஷனரின் கதவைத் தள்ளினார். அதைப்பார்த்த பி.ஏ.' கத்துவதற்கு டயம் இல்லாமல் பேராசிரிரையைப் பிடித்திழுப்பதற்காக, மேஜை, நாற்காலி போன்ற வேலிகளைத் தாண்டியபோது, பேராசிரியர் வெளியே காணப்படவில்லை. உள்ளுக்குள் ஒடிய ‘பி.ஏ.வின் பின்னால், ஆச்சரித்து நின்ற முத்தையாவும் ஒடினான். கமிஷனர் தன்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக, பி.ஏ. ‘எப்படி சார் உள்ளே வரலாாம்? என்று குரலை உயர்த்தியபோது, பேராசிரியர், சீப் கமிஷனர் எதிரே கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு, முத்தையாவையும் உட்காரும்படி கண்ணடித்தார். அருகே இருந்த ஒருவரைப் பார்த்து ஹலோ என்றார். அவர் வீட்டை ரெய்ட் செய்த அதே அளிஸ்டென்ட் டைரெக்டர். எதையோ தலைகுனிந்து செய்து கொண்டிருந்த சீப் கமிஷனர், வெளிச்சத்தோடு எரிந்த ரெட் லைட்டையும், கோபத்தோடு எரிந்த ‘பி.ஏ வையும், குரோதமாகப் பார்த்தபோது, பேராசிரியர் பேசினார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/194&oldid=558801" இலிருந்து மீள்விக்கப்பட்டது