பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 * சத்திய ஆவேசம்

என் பேர் பெருமாள்சாமிங்க வடசென்னைக் கல்லூரியின் சஸ்பென்டட் பிரின்ஸ்பால். இன்னைக்குப் பேப்பர்ல வந்த சமாச்சாரமாய்.

சீப் தலையை நிமிர்த்தினார்.

"ஐ.ஸி. குயிக்கா சொல்லுங்க. நான் பிஸ்ஸி"

"சார்.பிளிஸ். சார். நான் சொல்றது வரைக்கும் பைலைப் பார்த்து பிஸ்ஸியாகாமல், ஒரு அஞ்சு நிமிஷம் கேளுங்க சார். இதோ இருக்காரே, ஒங்க அளிஸ்டெண்ட் டைரக்டர், இவர் தலைமையில் என் பாடாதி வீட்ல ரெய்டு நடந்து, எனக்குக் கொடுத்த பஞ்சாரமா இது. பிளிஸ் பாருங்க சார். எதுவுமே கிடைக்கலன்னு எழுதியிருக்கதை நல்லாப் பாருங்க சார் நிலைமை இப்படி இருக்க, இன்றைக்கு, என்னைப் பற்றி வந்த செய்திகளைப் பார்த்திருப்பீங்க. நானா சார் வீடு வச்சிருக்கேன்? என் வீட்லயா சார் ஒங்க ஆட்கள் பத்து லட்சம் ருபாய் எடுத்தாங்க?

சீப், சமர்த்தரானார்.

"பத்திரிகை செய்தியில் ஒங்க பெயர் இல்லையே! உங்களைத்தான் எழுதியிருக்குன்னு ஏன் எடுத்துக்கிறீங்க?"

"எனக்கு மானம் இருக்கதால எடுக்கேன். என்ன சார், நீங்களும் அந்த பேப்பர்காரங்க எழுதுனது மாதிரியே பேசுறிiங்களே, வடசென்னை கல்லூரியில சஸ்பென்டான பிரின்ஸ்பால், அடையார் பக்கம் குடியிருக்கிறவர். ஐ.டி. ரெய்டானவர்-இது என்னைத் தவிர யார் சார்? ஆபீசர்களே மடையங்கன்னு இங்கே இருந்து சொல்றேன்னு வச்சுக்கோங்கோ, அது ஒங்களைத் தவிர வேற யாரை சார் குறிக்கும்?

"பீ காம் ஜென்டில்மேன். ஐ. ஆம் ஸாரி."

"ஒங்க அதிகாரி எவனோதான் சார் பத்திரிகைகளுக்கு பொய் நியூஸ் கொடுத்திருக்கான்."

"நோ. நோ. நானும் செக்கப் பண்ணுனேன். என் ஆபீஸ் ஸ்டாப் யாரும் அப்படிக் கொடுக்கல. உங்களுக்கு வேண்டாதவங்க யாரோ ரெய்ட் நடந்ததைப் பயன்படுத்தி, விஷமம் பண்ணிட்டாங்க. நாங்க இப்படி அநாகரீகமாய் பொய்யும் புழுகுமாய் புராம்ட் செய்ய மாட்டோம்."

"தேங்க் யூ ஸார். அப்படின்னா பத்திரிகைகளுக்கு நீங்க ஒரு மறுப்பு செய்தி விடுங்கோ ஸார்?"

"வாட்? டினையல் ஸ்டேட்மென்டா? எங்க வேல இல்ல அது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/195&oldid=558802" இலிருந்து மீள்விக்கப்பட்டது