பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 184

"ஒங்களை குவாட் செய்திருக்காங்கேள" "ஆயிரம் பேர் குவாட் செய்வான். ஒவ்வொரு நியூஸுக்கும் டினையல்னு வந்தால், அப்புறம் நாங்களே ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டியதிருக்கும்".

"நீங்க ரெய்ட் செய்ததால்தானே ஸார் நியூஸே வந்தது. என்ன நடந்ததுன்னு மட்டுமாவது அறிக்கை விடுங்க ஸார்."

“ஸாரி. எங்களால இயலாது. ரூல்ஸ் இடம் கொடுக்கல." "அப்படின்னா, எப்படி ஸார் ரெய்ட் செய்யலாம்?" "இப்பவும் சொல்றேன், ஒங்க மேல சந்தேகம் வந்தால், இன்னும்கூட நாங்க ரெய்ட் செய்யலாம்."

"அப்போதும் பத்திரிகையில, இதே மாதிரி செய்திகள் வரும. நீங்க அப்போவும் இதே பதிலைத்தான் சொல்விங்க, இல்லையா? முத்தையா. நீ பேசப்படாது."

"யூ ஆர் அஜிடேட்டர்ட். ஐ அம் ஸாரி பார் யூ. பட். மறுப்பு ஸ்டேட்மெண்ட் கொடுக்க. ரூல்ஸ் இடம் கொடுக்கல."

"இரண்டு மாதத்திற்கு முன்னால. ஹைதராபாத்ல. ஒரு பழைய மகாராஜா வீட்ல. ஐ.டி. ரெய்ட் நடந்ததாய. வந்த பத்திரிகைச் செய்திகளை. ஒங்க டிரபார்ட்மென்டே மறுத்திருந்ததே. ஒருவேளை. இந்த டினையல். பழைய மகாராஜாக்களுக்குத்தான் பொருந்தும். பழைய பிரின்ஸ்பாலுக்குக் கிடையாதா? -

"அது என்னோட சர்க்கிள் இல்ல. நானா இருந்தால் அப்படி ஒரு மறுப்பறிக்கை வெளியிட மாட்டேன். தேட்ஸ் ஆல்."

"அதாவது நீங்க என் வீட்டை ரெய்ட் செய்வீங்க. இதை வச்சு பிரஸ்காரன் என்னையே ரெய்ட் செய்வான். நீங்க வாயை முடிட்டு இருப்பீங்க. அப்படின்னா நீங்க பஞ்சாரமா கொடுக்கிறதுல என்ன ஸார் அர்த்தம்? இந்தா பாருங்க, அஸிஸ்டெண்ட் டைரக்டர் அப்போ ரெய்ட் செய்யும்போது, ஒங்க வாய் எப்படிப் பேசிச்சு? இப்போ ஏன் ஸார் சும்மா இருக்கு?

"அதுதான் சொல்ல வேண்டியதை எல்லாம், சிசியே சொல்லிட்டாரே."

"சீப் கமிஷனர் ஸார் நான் இந்த நாட்டின் ஒரு கெளரவமான பிரஜை. சட்டத்தை விரும்பாட்டாலும் மதிப்பவன், நேர்மையானவன்.'

"இதை நான் மறுக்கலியே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/196&oldid=558803" இலிருந்து மீள்விக்கப்பட்டது