பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 * சத்திய ஆவேசம்

"ஒங்களை அறிந்தோ அறியாமலோ என் பேர் டேமேஜ் ஆயிட்டுது. பிளிஸ் இஷ்யு டினையல்"

"நத்திங் டுயிங், ஸாரி. பட் ஐ ஹேவ் ஸிம்பதி பார் யூ" "ஸிம்பதி வித்தவுட் ஆக்ஷன் இஸ் லைக் இம்பொடன்ஸ். அதாவது செயல்படாத இறக்கம் பொட்டைத்தனமானது." "யு ஆர் அஜிடேட்டட் பிளிஸ் கெட் அவுட்" "ஒங்க சாதனைகளை மட்டும் பேப்பர்கார பேமானிப் பயல்ககிட்டே சொல்லிப் பெரிசாய் போடத் தெரியுது. வீட்டுக்குள்ளே வந்து, என்னோட பொருட்களை தாறுமாறாய் புரட்டத் தெரியுது. எதுவும் இல்லன்னு கண்டு பிடிக்கத் தெரியுது... ஆனால் பத்திரிகையில சொல்லத் தெரியாது. ஏன்னா என் வீட்ல எதுவும் சட்ட விரோதமாய் இல்லாதது ஒங்க சாதனைக்கு ஒரு சோதனை பாருங்க. நீங்க வீட்டை ரெய்ட் செய்திங்க; இதனால பிரஸ்காரங்க என்னையே ரெய்ட் செய்யுறாங்க"

"டோண்ட் வேஸ்ட் மை டயம். எனக்கு நிறைய வேலை இருக்குது. எங்க டிபார்ட்மென்டோட நிலைமையை சொல்லிட்டேன். நீங்க எத்தனை தடவை சொன்னாலும் இதுதான் பதில்"

"ஹைதராபாத்ல மட்டும்." "அதை ஹைதராபாத்ல போய் கேளுங்க. என் பிராணனை ஏன் வாங்குறிங்க? பிரசன்ட் ஸ்டாண்டர்ட் ஆப் ஜர்னலிசம் இஸ் வெறி பேட் என்ன செய்யுறது. ஓ.கே. மிஸ்டர்."

"என் பேரு பெருமாள்சாமி!"

"ஓ.கே. மிஸ்டர் பெருமாள்சாமி! ஏ.டி. அப்புறம் அந்த கோடம்பாக்கம் ரெய்ட்ல."

பெருமாள்சாமி எழுந்தார். ஏதோ கத்தப் போன முத்தையாவின் கையை அழுந்தப் பிடித்தபடியே, சீப்பை பார்த்தார். அவரோ, பெருமாள்சாமியே அங்கே இல்லாததுபோல் அனுமானித்துக் கொண்டு, அளிஸ்டெண்ட் டைரக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியர், அவரை வாய் துடிக்கப் பார்த்தார். பிறகு, முத்தையாவை ஊன்றுகோல்போல் பிடித்தபடி, வெளியேறினார்.

இருவரும், அத்தனைக் கூட்டத்திலும் தனிமைப்பட்டு நடந்தார்கள். பஸ்நிலையத்தைக் கடப்பது தெரியாமல் கடந்து நடந்தார்கள். பேராசிரியர், சட்டென்று நின்று ஆகாயத்தைப் பார்த்தார். பிறகு, முத்தையாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/197&oldid=558804" இலிருந்து மீள்விக்கப்பட்டது