பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 186

"இது கண்ணாடி சமூகம் சார்.இதனாலதான் எல்லாமே எதிரும் புதிருமாய் தெரியுது. பொய், உண்மை முலாத்தோட உலா வருது உண்மையோ பொய்பாசி படர்ந்து முலையில கிடக்குது. இதை நாம் அங்கீகரிக்கலைன்னாலும் ஒப்புக்கொண்டு, மேற்கொண்டு எதையாவது செய்யனும்"

"முத்தையா, என் தலை சுத்துது. என்னைக் கொஞ்சம்

பிடிச்சுக்கோ:

அந்த தொழிற்சாலையின் ஜெனரல்-மானேஜர், தனது, ஏ.ஸி அறைக்குள் ஒசியாக வந்த வாடிக்கைப் பத்திரிகையையே, முறைத்துக் கொண்டிருந்தார். நாளைக்கு வெளியாகும் வாடிக்கைப் பத்திரிகையின் ஒரு பிரதி இன்றைக்கே, அவர் கைக்கு வந்து விட்டது. அதுவும் 'வித் பெஸ்ட் காம்டப்ளிமென்ட்ஸ் என்று அட்டையிலேயே எழுதப்பட்டு, அதற்குக் கீழே வேடிக்கையின் ஒற்றை முதலாளியின் சொந்த கையெழுத்தோடு, மூன்றாவது பக்கத்துலேயே, அவரது மகள் ஆடிய புகைப்படங்கங்ள "பரத நாட்டியத்திற்குக் கிடைத்திருக்கும் புரதச் சத்து" என்ற தலைப்பில், டாட்டரின் பல்வேறு நாட்டிய போஸ்களைக் கொண்ட ஒரு பக்க கலர் பிச்சர். கட்டுரையை, மேலும் கண்ணால் தடவிப் பார்த்தபோது, இந்த நாட்டிய அற்புதத்தைப் பெற்ற அதிசய மனிதர் ஆனந்த்' என்ற வரிகளில் சாவாரி செய்யும், அவருடைய புகைப்படம்.

ஜி.எம்., அந்தப் பத்திரிகையின் அந்தப் பக்கத்தையே பார்த்தபடி சுழல் நாற்காலியை சுற்ற வைத்து, சுழன்றார். இந்த தொழிற்சாலையில் நிர்வாகம், வேண்டுமென்றே கள்ள விவரங்களைக் காட்டி, நட்டக் கணக்கைக் காட்டி, குறைந்தபட்ச போனஸ்தான் கொடுக்க முடியும் என்று சொல்வது கேலிக்கூத்து என்றும் புள்ளி விவரங்களைக் காட்டி, போனஸ் கூட்டப்படவில்லையானால், வேலை நிறுத்தத்தைத் தவிர வேறு வழியில்லை என்று தொழிலாளர் சங்கம் கொடுத்திருக்கும் நோட்டீஸ் சம்பந்தப்பட்ட கோப்பை, மேஜையின் ஒதுக்குப்புறமாய் தள்ளிவிட்டு, தன் படத்தையே பார்த்தார். தமிழகத்தில் உள்ள அத்தனை மக்களும், தன் படத்தையே, வைத்த கண் வைத்தபடி பார்ப்பது போன்ற பிரமை. புராண ஈஸ்வரனை மோகினி பிடித்துக் கொண்டதுபோல் இந்த தொழிலீஸ்வரனை, மீண்டும் பப்ளிஸிட்டி மோகினி பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/198&oldid=558805" இலிருந்து மீள்விக்கப்பட்டது