பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 8

மின்சார விளக்குக் கம்பத்தில், முகத்தை ஒட்டிக் கொண்டு, அதன் சிமெண்ட் மொழுக்கில், ஒரு காலை தூக்கி வைத்தபடி நின்றார். முத்தையா தன்பாட்டுக்குப் பேசுபவன் போல் பேசினான்.

"நீங்க பட்ட கஷ்டத்தையோ.. படுற கஷ்டத்தையோ. நான் மறக்கலப்பா. தயவு செய்து. அதையும், இதையும் முடிச்சுப் போடாதீங்க ஒங்களுக்கே தெரியும். ஒங்க கோணிக்கடை முதலாளி மகன் பிரபுவும், இன்னும் ரெண்டு பணக்காரப் பையன்களும், எனக்குப் போட்டியாய் மாணவர் தலைவர் தேர்தலுலே நின்னாங்க. தங்களோட படத்தை. விதவிதமான போஸ்டர்ல போட்டாங்க. ஒருத்தன் நாட்டோட விலை வாசியைக் குறைப்பேன்னு கூட வாக்குறுதி அளிச்சான். தார தப்பட்ட மேளம் போட்டு, ஆட வச்சாங்க. பாட வச்சாங்க. தேர்தலுக்கு, ஆனால் நானும், என்னை மாதிரி அன்னக் காவடிகளும் வெறும் சாக்பீசால எழுதிப் போட்டோம். அவங்க அப்பாக்களும், அந்த அப்பாக்களுக்கு அப்பன்களான அரசியல் கட்சிகளும் கொடுத்த பணத்துல. பாதியை சுருட்டிட்டு, மீதியை வச்சே. அவங்களால இப்டி பண்ண முடிஞ்சது. ஆனாலும், ஏழப்பசங்க இந்த காலேஜ்ல இருக்கதுனாலே. இந்த வேட்டி கட்டுன முத்தையாவால ஜெயிக்க முடிஞ்சது. நான் மாணவர் தலைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நீங்க சிரிச்ச சிரிப்பு. இப்பவும் என் மனசில நிக்குது."

"ஏய். ஏதாவது பேசி, என் மனசை மாற்றப் பாத்தே... ஒன்னையும் உதப்பேன். ஒம்மாவையும் உதப்பேன். இப்போ நடுத்தெருவுக்கு வந்ததைச் சொல்லுன்னால். சிம்மாசனம் ஏறுனதைச் சொல்லுறான்."

தந்தை மீண்டும் விறைப்பானார். இ விக்கப்பட் * + மேலும் தொடர்ந்தான்.

"இந்தக் காலேஜை நடத்துற டிரஸ்ட் போர்ட்ல, ஒங்க கோணிக்கடை முதலாளியை மாதிரி பல மடங்கு பணக்காரங்க இருக்காங்க. இதுல இருக்கிற அரசியல்வாதி ரேட் பேசுறவர். ஒருத்தியை ரேட்டிலேயே கல்யாணம் செய்தவர். இதனரல. எல்லாமே குளறுபடி காலேஜை இஷ்டத்துக்கு ஆட்டிப் படைச்சாங்க. வாத்தியாருங்க புரோமஷன்லயும் கையை வச்சாங்க- இருபது வருஷமா நால்லா பாடம் நடத்துற ஆசிரியருக்குக் கிடைக்க வேண்டிய புரபஸர் பதவியை, டிரஸ்ட்போர்ட் சேர்மன் மருமகனுக்குக் கொடுக்கப் போனாங்க. இதை எதிர்த்து, மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்துனோம். கடைசியில். எங்க ஆசிரியருக்கே புரடஸர் பதவி கிடச்சுது. இதை அவங்க மனசுல கருவிக்கிட்டு இருந்திருக்காங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/20&oldid=558623" இலிருந்து மீள்விக்கப்பட்டது