பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 * சத்திய ஆவேசம்

கன்னையா, தன்னை உள்ளே விட்டுவிட்டு, வெளியேறிக் கொண்டிருந்த பியூனின் அகலமான முதுகை, ஒடுக்கமாகப் பார்த்தார். அவர்தான் கை கழுவப் போனவரை, வழிமறித்துக் கூட்டி வந்தார். ஜி.எம், சாவகாசமாகக் கேட்டார்.

"நீ. வர... வர டிஸ்-ஒபிடியண்டாய் போய்க்கிட்டு இருக்கே"

“வேலைய ஒழுங்காத்தான். வழிப்ட் முடிஞ்ச பிறகுகூட செய்யுறேன். ஸார்."

"ஒரு தொழிலாளியோட கடமையைப் பற்றி ஒனக்குத் தெரியுமா? வேலையில் மட்டும் விசுவாசமாய் இருந்து பிரயோஜனம் இல்லை. ஒன் வீட்டுக்கு சோறு போடுற பேக்டரி நிர்வாகம் சொல்றதை விசுவாசமாய் நடத்திக் காட்டனும் தெரியுமோ?

"அதனால்தான். ஸ்டிரைக் நடந்தப்போகூட, வேலைக்கு வந்தேன் ஸார்.

"குட். வெரிகுட். அதனாலதான். ஒன்கிட்டே நேருக்கு நேராய் பேசுறேனாக்கும். இல்லேன்னா. நீ. என் ருமுக்கு வெளியே கூட நிற்க முடியுமா? பட். வர வர... என்னை. நீ மதிக்க மாட்டேங்க."

"அப்படில்லாம் சத்தியமாய்."

"சத்தியமுன்னா. நான் சொன்னதைச் செய்திருப்பே."

"எதைச் சொல்லி, ைெதச் செய்யல. சார்." "ஏய்யா நடிக்கிறே? ஒன் டாட்டரை, புரபசர் பெருமாள்சாமி மேல கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னேன். செய்தியா?

"அதுல ஒரு சிக்கல்." "என்னய்யா பொல்லாத சிக்கல்?”

"பெருமாள்சாமி நம்மை மாதிரி இல்ல. பிறர் விவகாரத்தில் தலையிடாதவர். தங்கமான மனுஷன்"

"சரி, நான் சொல்லிட்டேனே."

"பேக்டரி விவகாரமுன்னால் உயிரைக்கூட கொடுப்பேன். ஆனால் இது குடும்ப விவகாரம் ஸார்."

"என்னய்யா பொல்லாத குடும்பம்? இந்த பேக்டரி இல்லாமல் எப்படிய்யா ஒன் குடும்பம் நிற்கும்? சரி. இப்போதாவது உன் டாட்டரை எழுதிக் கொடுக்கச் சொல்லு"

"அபாண்டமாய் அவளும் எழுதமாட்டாள். நானும் விடமாட்டேன்

சார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/201&oldid=558808" இலிருந்து மீள்விக்கப்பட்டது