பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 190

"ஒன் டாட்டர்கிட்டே அந்த ஆள் மோசமாய் நடந்தது உண்மைதானாம். அவள் பூசிமழுப்புறாள். நீதான் அவளை வழிக்குக் கொண்டுவரனும்."

"என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும் சார். அப்படி ஒன்று நடந்திருந்தால், அங்கேயே செருப்பைக் கழட்டியிருப்பாள்."

"இதுல இருந்து என்ன யூகிக்க வேண்டியதிருக்குதுன்னா, ஒன் டாட்டர், ஆரம்பத்துல வாய்மூலம் கம்ப்ளெயின்ட் கொடுத்திருப்பாள். அப்புறம் பல பெண்களுக்கு இயல்பாய் உள்ள குணம் மாதிரி, பிறகு அவருக்கு சரிப்பட்டிருப்பாள். ஒன் டாட்டர், எழுதிக் கொடுக்காட்டால், இப்படித்தான், யூகிக்க வேண்டியது இருக்கும்."

"அப்படி எந்தத் தேவடியாள் மகனாவது சொன்னாமுன்னால், நான். என் பழைய செருட்ைபைக் கழட்ட வேண்டியிருக்கும்."

கன்னையா, கதைக்கு வரையப்படும் ஒவியம்போல், சொன்னதோடு நிற்காமல், தன் பிய்ந்த செருப்பை, காலில் இருந்து உதறி, முன்னால் தூக்கிப் போட்டார். அவர் உதடுகள் துடித்தன. உடம்பு முறுக்கேறியது. விஸ்வருபம் எடுத்தவர்போல், ஜி.எம்மை நோக்கி, தலையை நிமிர்த்தினார்.

ஜி.எம். அசந்துவிட்டார். கன்னையாவின் நேருக்கு நேரான கண்வீச்சைத் தாங்க முடியாமல், தலையைத் தாழ்த்தினார். கன்னையா, இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

"உயிருக்கு மிஞ்சுனது எதுவும் இல்ல. என்னை மாதிரி பாட்டாளிங்களுக்கு, இருக்கிற ஒண்ணே ஒண்னு தன்மானம் இதுதான். எங்களுக்கு காரு, பங்களா, ஏ.ஸி ரும், கார் பங்களாக்காரன் கூட்டிக் கொடுக்கிறது மாதிரி, எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் வராது.”

ஜி.எம், அசந்துவிட்டார். கன்னையா, அவரை நினைக்காமல், உலக நடப்பைச் சொன்னாலும், ஜி.எம்மோ, அவர் தன்னுடைய சம்சாரக் குப்பையை கிளறுவதாக நினைத்து, வாய்வரை வந்த கோபத்தை, மழுப்பலான சிரிப்பாய் மாற்றியபடி சொன்னார்.

"சரி, நீ போகலாம். ஒன்பாடு, அவங்கபாடு. கோ'

வேலை இடத்திற்கு வந்த கன்னையா, கூர்மையான இரும்பாயுதத்தை பல்லாக்கியபடிசுழன்ற ராட்சத யந்திரத்தையே வெறித்துப் பார்த்தார். செம்பருத்தியாய் கொதித்த இருப்புக் கம்பிகளை அது கக்கிக் கொண்டிருந்தது. அவற்றை எடுத்து, அருகேயுள்ள தண்ணிர் டாங்கில் போடவேண்டும். அதுதான், அன்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/202&oldid=558809" இலிருந்து மீள்விக்கப்பட்டது