பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 192

"என்னடா கண்ணா?"

ஆஜானுபாகுவான ராமமூர்த்தி, சட்டியை கவிழ்த்துப் போட்டது மாதிரி தோன்றிய தலையைத் தொங்கப் போட்டபடியே உளறினார்.

"ஒன்றுமில்லை பெரியப்பா."

"சோளியன் குடுமி சும்மா ஆடாது. சொல்ல வந்ததை, சட்டுப்புட்டுன்னு சீக்கிரமாச் சொல்லு, எனக்கு ஆயிரம் வேலை."

"எனக்குத் தலையே வெடிச்சிடும் போலுக்கு பெரியப்பா."

"அப்படின்னா புத்துருக்குப் போ. இங்கே ஏன் வந்தே? டிரஸ்ட் போர்ட் மீட்டிங் நடக்கப் போகுதுன்னு, நான் உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கேன். நீ பிலாக்கணம் பாடுறியாக்கும். சீக்கிரமா சொல்லுடா."

“வந்து. வந்து. என் பேருக்கு, பேங்கில ஐம்பதாயிரம் ருபாய் போட்டிங்க... நானும் முட்டாள்தனமாய் பெருமாள் சார்தான், என்பேர்ல பணத்தைப் போட்டதாய் எழுதிக் கொடுத்திட்டேன். ஆப்பசைத்த குரங்கு மாதிரி ஆயிட்டேன்." "அதுக்கு இப்போ என்னடா? "பெருமாள்சாமி, கோர்ட்ல கொடுத்த மனுவில, என்பேர்ல பணம் நீங்கதான் போட்டதாய் சொல்லி இருக்கார். கோர்ட்ல ரிட் ஆப் மேன்டமஸ்ஸோ என்னவோ வாங்கியிருக்காராம். கோர்ட்டும், முழு விவரத்தையும் விசாரிக்கும்படி யுனிவர்ஸிட்டிக்கு உத்தரவு போட்டிருக்காம்."

"போடட்டுமே என் உத்திரவுக்கு முன்னால, எந்த உத்திரவு எடுபடும்?"

"வாஸ்தவந்தான். ஆனால் காலம் மாறிட்டுன்னு காலிப்பசங்க பேசுறாங்களே. உண்மை வெளியாகப் போகுது. ஒனக்கு ஆறு வருஷம் கிடைக்கப் போகுதுன்னு பேசுறாங்களே."

"எந்தப் பயல் சொன்னது? "ஒங்க மகன் உட்பட எல்லாப் பயலும் சொல்றாங்க." "என்னது? என் மகன் கூடவா? "அவரு சம்சாரம் கூட, முந்தாநாள், நான் கத்திரிக்காய் வாங்கிக் கொடுக்கும்போது, புருஷன் சொன்னதையே சொல்லிச்சு. ஆம்புடையானாவது மெதுவாச் சொன்னார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/204&oldid=558811" இலிருந்து மீள்விக்கப்பட்டது