பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 * சத்திய ஆவேசம்

"இப்போ. நான். என்ன செய்யணுமுன்னு நினைக்கேடா?

"நான் பிள்ளக்குட்டிக்காரன் பெரியப்பா. என்னை வாழ விடுங்க. என் பேர்ல போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துடுறேன். நீங்களும் நான் எழுதிக் கொடுத்ததை, என் கிட்டேயே கொடுத்திடுங்க பெரியப்பா."

"டேய். டேய். காலை தொடாதடா. கால விடுடா. கயிதே எஸ்.எஸ்.எல்.சி பெயிலாப் போன ஒன்னை, காலேஜ்ல கொண்டு வந்து கிளார்க்கா சேர்த்து, இப்போ இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த எனக்காடா துரோகம் செய்யப் பார்க்கே? வளர்த்த கிடா மார்பில பாயும் என்கிறது சரியாப் போச்சு"

"நீங்க என்னை கிடாமாதிரி வளர்த்தது நிஜம்தான் பெரியப்பா. அதுக்காக ஒங்க கத்திக்கு நான் தலய நீட்ட முடியுமா? நன்றின்னு ஒரு நாய்ப்புத்தி இருக்கதாலதான் உங்ககிட்டே கேட்கிறேன். இல்லன்னா நேராய் போலீஸ்ல போய், ஒங்க நிலைமையும், என் நிலைமையையும் சொல்லி இருப்பேன். அப்ருவராய் மாறினால் தண்டனை கிடையாதாம்."

அப்பாவுவின் நரைமுடிகூட துடித்தது. குத்திட்ட கால்களை, வெடுக்கென்று கீழே போட்டுவிட்டு, மதர்ப்பாக நின்ற ராமமூர்த்தியை, குதர்க்கமாய் பார்த்தபடி கத்தினார்.

"இந்தா பாருடா ராமமூர்த்தி சொந்தக்காரனாச்சேன்னு சொல்லி வைக்கேன் கேளு. இந்தப் பேச்சை. இன்னொரு தடவை எடுத்தே, நீயே பணத்தை கையாடுனதாய், நான் போலீஸ்ல புகார் செய்ய வேண்டியது வரும். பெருமாள்சாமி வழக்குல, எனக்கு ஆறு வருஷம் கிடைக்குதோ, என்னவோ, என்னோட புகாரால மவனே, ஒனக்கு எட்டு வருஷம்கிடைக்கும். அடே கலியபெருமாள் வாடா, கிரைம் பிராஞ்சுக்கு போன் போடுடா."

"பெரிப்பா. பெரிப்பா. நான் பிள்ளை குட்டிக்காரன் பெரிப்பா. அப்டி எதுவும் செய்திடாதிங்க பெரிப்பா:

"ஒன் பிள்ளிங்க எனக்கு பேரப் பிள்ளிங்க இல்லையாடா? மடையா. இந்த படாதி அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் ரிட்டயர்டானதும், அதுல ஒன்னப் போடலாமுன்னு நினைச்சுட்டு இருக்கேன். என்கிட்டேயே எதிர் வழக்காடுறியா?

"வழக்காடல பெரிப்பா. சந்தேகம் கேட்டேன்." "சந்தேகம் இப்போ தீர்ந்திருக்குமுன்னு நினைக்கேன். சரி சரி. ஒன் வேலையைப் போய்ப் பாரு. ஒன்மேல ஒரு துரும்புகூட விழாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/205&oldid=558812" இலிருந்து மீள்விக்கப்பட்டது