பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 194

போடா. நீ குழந்தை. ஒன்னை எவனோ எய்திருக்கான். எவனோ என்ன எவனோ. என் மகனேதான். போடா'

ராமமூர்த்தி, பெரியப்பாவை சந்தேகமாய் பார்த்தபடியே, கண்களை நகர்த்தாமல், உடம்பை நகர்த்தப் போனார். இதற்குள், தாற்காலிக முதல்வர், தமிழாசான் மாணிக்கம், ராமமூர்த்தியை அப்புறப் படுத்தியபடியே, உள்ளே வந்தார். தும்பைப் பூ வேட்டியும், துவரம் பருப்பு நிற ஜிப்பாவும் துலங்க, கைகட்டி மெய்புதைத்து நின்ற முதல்வர், எதிர் நாற்காலியில் உட்காராமல், அப்பாவு, மேசைமேல் பரப்பியிருந்த இரண்டு கைகளையும், தனது இரு கரங்களால் தூக்கிப் பிடித்தபடியே, கண்களை மேஜைப்பரப்பில் அலைக்கழிய விட்டார். அப்பாவு அலறினார்.

“என்னய்யா... நீங்க மரியாதை இல்லாமல்... கையை விடுங்கய்யா..."

"தமிழ் பி.ஏ. மாணவர்களுக்கு இரண்டாவது பீரியட் என்னது. கண்ணகி வழக்காடு காதை பற்றி குறிப்பெடுத்து, மேசைமேல் வைத்தேன். உங்களை நினைத்ததில் காகிதக்கத்தையை மறந்துட்டேன். "அடக் கஷ்டக்காலமே. நான் ஏதோ வேஸ்ட் பேப்பர்னு, இந்தக் கூடையிலே போட்டுட்டேனே. கையை விடுங்கய்யா."

"கொஞ்சம் காலை எடுக்கிறிங்களா? குப்பையைக் கிளறி.” "சுக்கல் சுக்கலாய் கிழிச்சுப் போட்டுட்டேன் ஸ்ார்."

"அடக் கடவுளே!"

"நீங்க கூப்பிட்டால் பசங்களே வரமாட்டாங்க, கடவுள் எப்படிய்யா வருவார்? இருபத்தஞ்சு வருஷ சர்வீஸன்ைனு பேரு. பாடம் நடத்த இன்னும் பாயிண்ட்ஸ் இல்லாமல் முடியாதுன்னால் என்ன சார் அர்த்தம்? பசங்கதான் எப்படி உருப்படுவாங்க? சரி சரி. போங்க... நம்ம காலேஜ்ல லுரட்டி அடிக்கிறதே தமிழ்ப்பாடப் பசங்கதான். இதனால் அடுத்த வருஷத்துல இருந்து, தமிழ் மெயின் கோர்ஸையே எடுக்கப் போறேன். இதுக்குள்ளே பாயிண்ட்ஸ் வேணுமாக்கும்? வேண்டாம். சும்மாவே பாடம் நடத்துங்க."

பேராசிரியர். மாணிக்கம், பற்களைக் கடித்தார். தேரா மன்னா. செப்புவதுடையேன் என்ற கண்ணகியின் கோபக்கனல் இந்த கிராதகனுக்கு எப்படிப் புரியும்? எப்படிப் புரிய வைப்பது? அப்பாவுவே, அவருக்குப் புரிய வைத்தார்.

"மாணிக்கம் ஸார். கொஞ்சம் உட்காருங்க."

"இரண்டாவது பீரியட் மணியடித்து."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/206&oldid=558813" இலிருந்து மீள்விக்கப்பட்டது