பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 196

"அதெப்டி அய்யா? பில் கொடுத்தால் அவங்கதான் கொடுக்கனும், அதுதான் முறை."

"நீங்க பிரின்ஸ்பாலாய் இருக்கது மட்டும் என்ன முறையாம்?" "நானாய் கேட்கல. நீங்களா போட்டிங்க.." "போட்டவனுக்கு எடுக்கவும் தெரியும்."

"அப்போகூட நான் மகிழ்ச்சியடைவேன் அய்யா. அரசனாகப் போவதில்லை என்பது தெரிந்ததும், பாரா வண்டியில் இருந்த விடுபட்ட மாடு மாதிரி ராமபிரான் மகிழ்ந்ததாய் கம்பன் சொல்வது மாதிரி மகிழ்வேன். நானுண்டு, என் தமிழுண்டு என்று ஆனந்தப் பள்ளு படுவேன்."

"ஒங்களை ஆனந்தப்படுத்த, நான் என்ன மடையனா? கொட்டையும் போட்டு, பழமும் தின்னவன் இந்த அப்பாவு. நீங்க மட்டும் கையெழுத்துப் போடாட்ால், தமிழ் டிபார்ட்மென்டுக்கு, நீங்க தலைவராகவும் இருக்க முடியாது. உங்க வகுப்புக்கள்ல, பசங்க கலாட்ட பண்றது எனக்கு பியூன்கள் சாட்சியாய் தெரியும். போன வருஷம் பரீட்சையில் அதிகமாய் கோட்டை விட்டது தமிழ் பசங்கதான். இந்த ரெண்டையும் காரணமாய் காட்டி, ஒங்களை ஹெட் ஆப் தி டிபாட்மென்ட ஆப் தமிழில் இருந்து டிமோட் செய்ய எனக்கு அதிக நேரம் ஆகாது. எதுக்கும் நல்லா யோசிங்க. ஒரு சின்னப் பயல்கிட்டே நீங்க வேலை பாக்க வேண்டியது வரும். எதுக்கும் யோசித்துப் பாருங்க"

தமிழாசான் யோசித்தார். யோசிக்க யோசிக்க, அவர் மேனி சிலிர்த்தது. குறுகிய தலை நிமிர்ந்தது. திடீரென்று, நிலைமையைப் புரிந்துகொண்டு அப்பாவுவைக் கெஞ்சக்கூடப் போனார். ஏனோ தேராமன்னா கண்ணகி, அவரைத் தடுத்தாள். அவரை அறியாமலே அவர், கண்ணகியின் ஆண் அவதாரமானார். அப்போது அப்பாவு, அடிமேல் அடிவைத்து, அந்த அப்பாவி தமிழ் அம்மியை நகர்த்தப் போனார்.

"விஷயம் அதோடு நிற்காது தமிழ் ஸாரே. ஒங்க பெண்டு பிள்ளிங்க பாதுகாப்புக்கு நான் பொறுபில்லே. போன வருஷம் ஒங்க குடும்பத்தையே ரெளடிப் பயல்கிட்டே இருந்து காப்பாற்றியவன் நான் ஸ்ார்."

தமிழ்த்துறைத் தலைவர் பதவியை அல்லது பொறுப்பை, தொழிற் கற்பாகக் கொண்ட மாணிக்கம், கற்பழிக்கப் படப்போகும் பெண்போல் கத்தினார். அப்பாவுவை இழிவாகப் பார்த்தபடி, கண்களில் அனல் கக்க குரலிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/208&oldid=558815" இலிருந்து மீள்விக்கப்பட்டது