பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 * சத்திய ஆவேசம்

"நீங்க நெல்லுருக்குப் போனிங்களே. அதுக்கு மறுநாள், என்னை மாதிரி. வீட்ல படிக்க முடியாதபடி. ஒண்டி. ரும்ல. குடித்தன வீட்ல இருக்குற நாலைஞ்சு பசங்க லீவ் நாள்ல. காலேஜ்ல மைதானத்துல படிக்கிறதுக்காக வந்திருக்காங்க காலேஜ் ஹெட்கிளார்க்கும் காலேஜிற்கு சம்பந்தப்படாத நாலைஞ்சு பேரும் போதையோடேயே சீட்டு விளையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. 'பசங்களப் பார்த்து எதுக்குடா வந்திங்கன்னு; அதட்டி இருக்காங்க. 'டா' போட்ட கோபத்துல பசங்களும் நீங்க சீட்டு விளையாடும்போது, நாங்க படிக்க வரப்படாதான்னு கேட்டிருக்காங்க. உடனே பசங்கள அடி அடின்னு அடிச்சி. பசங்க வாயில வயித்துல ரத்தம் அது போதாதுன்னு, பசங்க அடிச்சுப்புட்டாங்கன்னு போலீஸ்ல வேற கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க. பசங்க லாக்கப்புக்குப் போயிட்டாங்க. இது போதாதுன்னு, மறுநாள் காலேஜ் பிரின்ஸ்பால்... அடிபட்ட பசங்களையே சஸ்பெண்ட் பண்ணிட்டாரு நான் மாணவர் தலைவன் என்கிற முறையில், வாதாடினேன். சஸ்பெண்டுன்னு வந்தால், ஹெட்கிளார்க்கையும் சஸ்பெண்டு பண்ணனுமுன்னேன். பிரின்ஸ்பால் பயந்து விட்டார். ஏன்னா, இந்த ஹெட்கிளார்க். டிரஸ்போர்ட் சேர்மனோட பேத்தி புருஷன். ஒரு குழு போட்டு விசாரிப்டோம் பசங்க தப்பு செய்திருந்தால், அவங்கள, நானே பகிரங்கமாய் மன்னிப்புக் கேக்க வைக்கிறேன்’னு சொன்னேன். மொதல்ல பிரின்பால் சரின்னார். அப்புறம். யார் கிட்டயோ டெலிபோன் பேசிட்டு முடியாதுன்னார்:

"டிரஸ்ட் போர்ட் சேர்மன் தூண்டிலில். பிரின்ஸ்பாலே. மாணவர்களை மீன் மாதிரி போட்டாரு வேற வழியில்லாம, வேலை நிறுத்தத்துல இறங்கினோம். உடனே, என்னை மாதிரி நாலுபேரை. எக்ஸ்பெல் அதாவது காலேஜ்ல இருந்து கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுறது மாதிரி வெளியேற்றி உத்திரவு போட்டிருக்காங்க. இருபது பசங்கள சஸ்பெண்ட் செய்திருக்கு. நாங்க மன்னிப்புக் கேட்டால் சேர்த்துக்குவாங்களாம். ஆனால் போலீஸ் லாக்கப்பில் இன்னும் இருக்கிற பசங்கள போலீஸ் விட்டாலும். இவங்க விடமாட்டாங்களாம்:

"இப்போ சொல்லுங்க. இந்தப் பசங்க.. குறிப்பாய் லாக்கப்புல துடிச்சிட்டு இருக்கிற ஏழப் பசங்க... நான் ஏதாவது செய்து அவங்களுக்கு உதவுவேன்னு நினைக்காங்க... என்மேல் அவ்வளவு நம்பிக்கை. எனக்கு இந்த மாணவ சக்திமேல நம்பிக்கை. நீங்கதான் இப்போ சொல்லனும் நான் படிச்சால் இவங்களோட படிக்கனும். ஒழிஞ்சா இவங்களோட சேர்ந்து ஒழியணும். போராடட்டுமா.. இல்லேன்னா மன்னிப்பு லட்டர கொடுத்துட்டு, காலேஜ்ல சேர்ந்து, நம்பிக்கைத் துரோகம் செய்யட்டுமா? நீங்க எது சொன்னாலும் கட்டுப்படறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/21&oldid=558624" இலிருந்து மீள்விக்கப்பட்டது