பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 198

அப்பாவு, அரைகுறையாய் கண்விழித்து, குறையரையாய் பேசினார்.

"தலைக்கு மேலே தண்ணிர் போகுதுடி ஆதி. தி பெற்ற மகன், அக்கெளன்டன்ட் ராமமூர்த்திப் பயலை துண்டி விடுறான். டிரஸ்ட் போர்ட் மெம்பருங்க கிட்டே என்னை ராஜினாமா செய்ய வைக்கனுமுன்னு லாபி' பண்றானாம். இரணியன் பெற்ற பிரகலாநாதன் மாதிரி நடக்கிறான். அவன் என்னைக் கேவலப்படுத்து முன்னால, நானே ராஜினாமா செய்யப் போறேன்."

ஆதியம்மாளுக்கு, மிருதங்க சக்கரவர்த்தியில், கே.ஆர்.விஜயா, கணவனுக்கு ஆதரவாய், மகனுக்கு எதிராய் போர்க்கொடி தூக்கியது நினைவுக்கு வந்தது. அந்த கதாப்பாத்திரத்துடன் ஐக்கியமாகி முழக்கமிட்டாள்.

"நீங்க ஏன் கலங்குறிங்க? அந்தப் பயல் எப்படி ஒங்களை மிஞ்சுறான்னு பார்த்துடுறேன். ஒங்களுக்கு இந்தப் பதவி போன பிறகு, நானே உயிரோட இருப்பேனா? இருக்கத்தான் முடியுமா? ஒங்களோட சேர்மன் பதவி, என்னோட மாங்கல்யம் மாதிரி. அவன் இப்போ நமக்கு மகன் இல்ல; முழுப்பாய் சுருட்டி மோகனசுந்தரத்தோட மருமகன், ரத்தக்காட்டேரி மல்லிகாவோட புருஷன். இதை நீங்க விட்டாலும், நான் விடப்போறதில்லை. வேணுமுன்னால் பாருங்கடேய் அடைக்கலசாமி ஒன்னைத் தாண்டா எருமைமமாடு நான் கூப்பிட்டேன்னு, என் மகன் சங்கரைக் கூட்டிவாடா"

அம்மாவைக் கூட்டிவந்து, அறைக்குள் விட்டுவிட்டு, அப்பாவுவிற்கு முகம் காட்டாமலே வெளிவாசலில் போய் நின்று கொண்ட அதே எருமைமாடு அடைக்கல சாமி, இப்போது, உள்ளே வந்து வெளியே போனார். ஆதியம்மாள் கணவனின் ஆதாயக்கரத்தைப் பிடித்துக் கொண்டாள். பிறகு "நீங்க ராஜினாமா செய்யுற நிலைமை வந்தால் பேசாமல் ரெண்டுபேரும் தூக்குப்போட்டு செத்துடலாம்" என்றாள். பத்து நிமிடத்திற்குள், அவர்களின் ஏக புதல்வன் சங்கர் வந்தார். நாற்பது வயது தேறும் சூட்கோட் அமர்க்களம் செல்லமான குறுந்தாடி, அவரைப் பார்த்ததும், அப்பாவு எழுந்து வராண்டாப் பக்கம் போய்விட்டார். சங்கர், குறுஞ்சிரிப்ாேபடு கேட்டார்

"எதுக்கும்மா கூப்பிட்டீங்க?"

"ஒன்னைப் பெற்று வளர்த்து பெயரிட்ட அப்பாவுக்கு எதிராய் நீ இப்படி செய்யலாமாடா? அவர் ராஜினாமா செய்யணுமுன்னு ஏற்பாடு செய்யுறியாமே? நான் அந்தக் காலத்துப் பொம்புளடா. ஒன் பெண்டாட்டி மாதிரி இந்தக் காலத்து காட்டேரி இல்லடா. என் ராசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/210&oldid=558817" இலிருந்து மீள்விக்கப்பட்டது