பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 200

ox ??

罗&够令姆哆料姆8始为总校姆必妙歌治影独

"சரி. அப்பாக்கிட்டே எப்படியும் ராஜினாமா வாங்கிடுங்க"

"என் தலையெழுத்து. சரிடா."

"தேங்க்ஸ்மா”

"ஏதோ பணம் கிணமுன்னே."

"ராஜினாமா லட்டரை வலது கையில் வையுங்கோ. நான், ஒரு லட்சம் ருபாயை, ஒங்க இடது கையில் வைக்கேன்."

இதற்குள் பியூன் அடைக்கலசாமி, குறுக்கே வந்தார். டிரஸ்ட் செயலாளர் சங்கரின் காதுகளில் "மல்லிகாம்மா வந்துருக்கு. நீங்களா வாlங்களா, நானே வரட்டுமான்னு கேட்டுட்டு வரச் சொல்லிச்சுது” என்றார். சங்கர் "சொன்னது ஞாபகம்" என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டே ஓடினார்.

மகன் போனதும், அப்பாவு வந்து ஆதியம்மாளை கேள்விக்குறியோடு பார்த்தார். மனைவிக்காரி, எடுத்த எடுப்பிலேயே தாக்குதலைத் தொடுத்தாள்.

"ஆனாலும் ஒங்களுக்கு இந்த வயசுக்குப் பிறகும், இப்படி பதவியாசை வரப்படாது. நம்ம பையன்தானே சேர்மனாய் இருந்துட்டுப் போறான். அவன் பதவியில் இருக்கதை, கண்ணால் பாக்குறதுக்குப் பதிலாய், இப்படியா பதவிவெறி பிடிச்சு அலையுறது? பேசாமல் ராஜினாமா லட்டர இப்பவே எழுதுங்க. கறிவேப்பில மாதிரி இருக்கது ஒரே பையன். அவன் நம் கண்முன்னால சேர்மனாகணும். சரி. ராஜினாமா செய்யுறிங்களா... நான் இங்கேயே உயிரை விடணுமா? என் பெற்ற வயிறு துடிக்கது ஒங்களுக்கு எப்படித் தெரியும்?

அப்பாவு, அதிர்ந்து போகவில்லை. தாயும் மகனும் கிசுகிசுவானபோதே, அவர் சந்தேகப்பட்டார். இப்போது அவர் மனதுள் துறவு மனப்பான்மை ஏற்பட்டது. ஆமாம். டிரஸ்ட்போர்ட் சேர்மன் பதவியில் இருப்பதற்காக, அவர் மனைவியையும், மகனையும் துறக்கக் துணிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/212&oldid=558819" இலிருந்து மீள்விக்கப்பட்டது