பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 202

கஷ்டப்பட்டு செய்த புரோட்டோ டைப். யோவ்! ராமு! இதை பேக் செய்து, கன்னையாகிட்டே குயிக்காய் கொடுப்பா."

கன்னையா, கர்மயோகி மாதிரி நின்றபோது, அந்த மாதிரிகள் பேக் செய்யப்பட்டன. கன்னையாவின் கைப்பைக்குள் வந்துவிட்டன. உடனே ஒர்க்ஸ் மானேஜ்ர் "உம், கிளம்புய்யா என்றார். கன்னையா கேட்டார்:

"டெலிவரி ஷிட் கொடுங்க ஸார். செக்யூரிட்டி கார்ட் கேட்பானே?

"டெலிவரி வrட்டை எடுப்பா. என்ன? இருந்தது தீர்ந்து போச்சுதா? அப்போ புரடக்ஷன் மானேஜர் கிட்டேயாவது, டெஸ்பாட்ச் ஆபீஸர் கிட்டேயாவது வாங்கிட்டு வாப்பா. என்ன லொள்ளுய்யா. ரெண்டு பேருமே போயிட்டாங்களா. அட கடவுளே! கன்னையா. இதை எடுத்துட்டுப் போ. நான் செக்யூரிட்டி கார்ட் கிட்டே, இன்டர்காம்ல பேசிடுறேன். ஒடுய்யா. ஜி.எம், ஒனக்காகக் காத்திட்டு இருப்பார்."

"அவ்வளவு அவசமுன்னால் ஒரு கார், இல்ல ஜீப்."

"பார்த்தியா, மற்றவங்களப் போகச் சொன்னால் குறைந்தபடசம் காராவது, ஹெலிகாப்டராவது கேட்பாங்கன்னுதானே, ஜி.எம்., ஒன்னை கொண்டுவரச் சொன்னார். பல்லவன் வசதி எதுக்குய்யா வரும்? இன்னுமா நிற்கே? ஒடுய்யா"

கன்னையா பையைத் தூக்கிக் கொண்டு, வெளியே நடந்தார். எல்லோரையும் தடவிப் பார்த்த கார்ட், இவரைப் பார்த்ததும், மற்றவர்களை நிற்க வைத்துவிட்டு, இவரைத் தடவாமலே, புன்சிரிப்போடு அனுப்பினார். அத்தனை கவலையிலும் கன்னையாவுக்கு பெருமிதமாய் இருந்தது. நான் பேசினதை ஜி.எம். தப்பாய் எடுக்கல. என் தொழில் விசுவாசத்தை, அவர் நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கார். இந்த மாதிரி பொறுப்பு, போர்மேனுக்குக்கூட கிடைக்காது.

ஒட்டமும், நடையுமாய் பாய்ந்த கன்னையா, ஒரு பல்லவனில் ஏறித் தொத்திக் கொண்டார். யந்திர-மாதிரி வடிவங்கள், கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கைப்பையை, பல்லவ பஸ்ஸிற்குள் திணித்துக் கொண்டு, உடம்பை மட்டும் புட்போர்டுக்கு வெளியே விட்டார்.

கன்னையா, பஸ்ஸில் இருந்து இறங்கி, பேக்டரியின் ஷோருமைப் பார்த்து நடந்தார். அது பூட்டிக் கிடந்தது. அங்கிருந்த வாட்ச்மேன், அப்போதுதான் வந்திருக்கும் தமிழறியா கூர்க்கா. அவனிடம், இதை ஒப்படைக்கவும் முடியாது. என்ன செய்யலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/214&oldid=558821" இலிருந்து மீள்விக்கப்பட்டது