பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 * சத்திய ஆவேசம்

தொழிற்சாலைக்கு, பழையபடி போக வேண்டும் இல்லையானால், ஒர்க்ஸ் மானேஜருக்கு டெலிபோன் செய்ய வேண்டும். இரண்டுக்குமே ஒரு ருபாய் வேண்டும். கையில் பைசா இல்லை. ஷோரும் வருவதற்கே காசு சரியாட்டு என்ன செய்யலாம்?

கன்னையா, வேகவேகமாய், வீட்டைப் பார்த்து நடந்தார். முன்றே மூன்று கிலோ மீட்டர் துரந்தான். அரை மணி நேரம் கூட ஆகாது. வீட்டிற்குப்போய் இருக்கிற காசை தேடிப்பிடித்து அம்பத்துருக்குப் போகலாம். அல்லது ஒ.எம்.முக்கு டெலிபோன் செய்யலாம்.

தமிழகத்தில் எந்த கஷ்டமோ, நஷ்டமோ, கொடுமையோ, கொடுங்கோலோ இல்லை என்பதுபோல் சொல்லாமல் சொன்ன சினிமா பேனர்களையும், கவியரங்க, பட்டிமண்டப, பாராட்டு, சீராட்டுவிழாப் போஸ்டர்களையும், அழகிய இளம்பெண்களின் புகைப்படங்களை தலைகீழாய் தொங்கப் போட்ட பத்திரிகை கடைகளையும் பார்த்தபடியே, கைவிசி, கால்துக்கி விரைவாய் நடந்து வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவை அவர் எட்டியபோது -

தீடிரென்று, இரண்டு போலீஸ்காரர்கள், அவரை எட்டிப் பிடித்தார்கள். பிறகு, அவர் கைப்பையைக் கைப்பற்றி, பேக் செய்யப்பட்டதை பிரித்தார்கள். பல்வேறு நெளிவு, சுழிவுகளோடு, விதவிதமான மூலை முடுக்குகளோடு இருந்த இரண்டு பித்தளை உருவங்களை, தூக்கிப் பார்த்து மீண்டும் அவற்றை கன்னையாவின் பைக்குள் போட்டார்கள். பின்னர் அவரின் கைகளை ஆளுக்கொரு வராகப் பிடித்துக் கொண்டார்கள். கன்னையா அதிர்ச்சியுற்று நின்றார். பிறகு வீரியத்தோடு பேசினாார்.

“ஸார். என் பேர் கன்னையா. அம்பத்துர் பேக்டரியில ஒர்க்கர்"

'அதனாலதான் பிடிச்சோம். நடடா ஸ்டேஷனுக்கு... அயோக்கிய ராஸ்கல்."

"ஸார். அப்புறம் நீங்க தான் விஷயம் தெரிஞ்சு வருத்தப்பட வேண்டியது வரும்."

"விஷயம் தெரிஞ்சுதான் பிடிக்கோம் எது பேசணுமுன்னாலும், ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோ. நடடா நாயே. கஸ்மாலம்; ராஸ்கல்."

கன்னையா, நகராமல் நின்றேபாது, போலீஸ்காரர்கள் அவரை, தரையில் கால் தேயும்படி தறதறவென்று இழுத்தார்கள். அப்படி இழுப்பது அவர்களுக்கு சிரமமாக இருந்ததால், ஒரு போலீஸ்காரர், கையைவிட்டுவிட்டு, பின்னால் வந்து கன்னையாவின் பிடரியை, லத்திக் கம்பால் குத்தினார். "கயிதே, கயிதே பேக்டரியில விலைமதிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/215&oldid=558822" இலிருந்து மீள்விக்கப்பட்டது