பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 204

முடியாத விஞ்ஞானப் பொருளை திருடினது மட்டுமில்லாமல் எங்களையே டபாய்கிறியா" என்று கத்திக் கொண்டே, அவர் முதுகில், லத்திக் கம்பால் விளாசினார். பிறகு, கம்பீரமாக முன்னால் நடந்து கன்னையாவின் ஒரு கையை, தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டார்.

அதிர்ச்சியில் விழுங்கப்பட்ட கன்னையா, அக்கம் பக்கம் பார்த்தார். ஒரே கூட்டம் ஏளனமான பார்வை. ஒன்னை மாதிரி நான் திருடன் இல்ல என்று திருட்டுத்தனமான பார்வைகள். அவருக்கு அங்கேயே உயிரை விட்டுவிடலாம் போலிருந்தது. பார்த்தவர்களில், தெரிந்தவர்களும் இருக்கலாம் என்று நினைத்து, அவர் கண்களை முடிக் கொண்டார். போலீஸ்காரர்களின் கரங்களையே கோலாக நினைத்தபடி, அவர் கண்கலங்க நடந்தார். விழியிழந்து நடந்தார். போலீஸ்காரர்கள் அவரை வழியெல்லாம் அடித்தார்கள். சிறிது தூரம் டோனபிறகு, அவர் கைகளிரண்டைடயும், பின்புறமாக வளைத்து, அவர் துண்டாலேயே கையைக் கட்டினார்கள். லத்திக் கம்புகளால், அவ்வப்போது, அவர் முதுகில் குத்தியபடி, மாட்டை விரட்டுவதுபோல் விரட்டினார்கள்.

வேகாத செங்கற்களால் கட்டப்பட்டது போலிருந்த போலீஸ் நிலையத்திற்குள், கன்னையா கொண்டு போகப்பட்டார். போலீஸ் ஜீப்பில் ஒயர்லஸ் ரேடியோ எதையோ உளறிக் கொண்டிருந்தது. பாரா பார்த்த போலீஸ்காரர்கள், எதுவும் நடக்காததுபோல், தங்களுக்குள் கூடப் பேசிக்கொள்ளவில்லை. என்றாலும், ஒரு பூஞ்சையான, மெலிந்த மனிதரை இப்படி அடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து, போலீஸ் வளாகத்திற்குள் கிடந்த சாராய கேஸ்களும், மாதக் கடைசி என்பதால் வழக்கு வலைக்குள் சிக்கிய 'வாடிக்கை வாசிகளும், அவரை அனுதாபமாகப் பார்த்தார்கள். ஐந்தாறு படிக்கட்டுகளில் ஏற்றப்பட்ட கன்னையா, அந்த வளாகத்தின் சிம்மாதனம் போலிருந்த துக்கல் அறைக்குள் கொண்டு போகப்பட்டார். ஒருவரை, ஒரேயடியாய் கொலை செய்யுமளவிற்கு இடவசதி கொண்ட மேஜை பரப்பில் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு, தூங்கிக் கெண்டிருந்த இன்ஸ்பெக்டர் திம்மையா கண்விழித்தார். கன்னையாவை, புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு, சுவாரஸ்யமாக "வாய்யா. வாடா.." என்று தலையாட்டி உருமினார்.

கன்னையாவிற்கு, அப்போதுதான் உண்மையின் பொய்மை நிழல் புரிந்தது. டெலிவரிவrட் கொடுக்காமல் அனுப்பப்பட்டதன் மர்மமும், ஜி.எம்.மின். சூழ்ச்சியும், ஒ.எம்.மின் உடந்தையும், இன்ஸ்பெக்டரின் ஒத்துழைப்பும், வாடிக்கையின் விபரீதமும் புரிந்தது. அது புரியப் புரிய அவருக்கு அண்டர் கிரவுண்ட் உலகம் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/216&oldid=558823" இலிருந்து மீள்விக்கப்பட்டது