பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 * சத்திய ஆவேசம்

லேசாக பயம் பிடித்தது. உயிருக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். முன்பு, தன்னை உருட்டி மிரட்டிய அதே அந்த இன்ஸ்பெக்டர் திம்மையாவை, ஏற இறங்கப் பார்த்தார். அவரோ, கோரப் சிரிப்போடு, குத்திட்ட மீசையோடு, கொடுரமான பார்வையோடு தரிசனம் தந்தார். அருகே இருந்த லாக்கப் அறைக்குள், இரும்பு கிராதிகளில் முகம் புதைத்து ஒடுங்கிப் போயும், ஓங்கிப் போயும் நின்ற மனிதக் கைதிகளை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டபடியே கன்னையா ஒலமிட்டார்.

"என்னை மன்னிச்சிடுங்கய்யா. ஒங்கள மாதிரி ஆசாமிங்கள முன்னெல்லாம் போலீஸ் அடிக்கும்போதும், பிடிக்கும்போதும், தப்புப் பண்றவங்களை இப்படித்தான் பண்ணனுமுன்னு நானே நினைத்தேங்க இப்போதான் புரியுது, என்னை மாதிரி உங்கள்ல எத்தன பேரு அப்பாவிங்களோ? எத்தனபேரு ஒங்க பெண்டுபிள்ளிங்க மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு இந்த மானங்கெட்ட பயல்க கிட்டே உதை தின்னிங்களோ?

திடீரென்று, கன்யைா மல்லாக்க விழுந்தார். தலைதெறித்து தனியாய் விழப்போவது போலிருந்தது. கண்கள் திறந்தபடியே இருட்டாயின. கம்போ, இரும்போ, கைமுஷ்டியோ, தொண்டையிலும், நெஞ்சிலும் பட்டது போலிருந்தது. கண்களைக் கொட்டிப் பார்த்தார். ஒளியில்லை. கால்களை நீட்டப் பார்த்தார். முடியவில்லை. கட்டப்பட்ட கைகளை அசைக்கப் பார்த்தார். இயலவில்லை. வாயெல்லாம் ஒரே ரத்தம். கன்னையா துப்பினார். இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், தன் பூட்ஸ் காலாலேயே, அவர் தலையை உருட்டியபடி "இன்னும் ஒனக்கு திமிர் அடங்கல. செட்டு சேக்குறியா செட்டு. ராத்திரி ஆகட்டும், அப்போதான் இருக்கு சேதி. இவனை. பின்னறைக்கு இழுத்துட்டுப் போங்க" என்றார்.

கீழே புரண்ட கன்னையாவை, இரண்டு போலீஸ்காரர்கள், அடிபட்ட நாளைய இழுத்துப் போவது போல் கால்களைப் பிடித்து உள்ளறையான பின்னறைக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள். போலீஸ் வளாகத்திற்குள் நின்றவர்கள், துப்பாக்கிகள் அப்பிக் கிடந்த சுவரருகே வந்துகூடி, போலீஸ் முதலாளிகளை வெறுப்போடும், பயபக்தியோடும் பார்த்தார்கள். லாக்கப்வாசிகளில் சிலர், இது அநியாயம் என்றுகூட சொல்லப் போனார்கள். பின்னர் இயலாதவர்களாய், வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார்கள். டெலிபோனையே முறைத்த திம்மையாவிற்கு, கையில் ஒரு ஊறல். வேடிக்கை நிருபனுக்கு போன் பேட்டு ஆசாமி சிக்கியிருக்கான். சொன்னதை அவன் செய்யாட்டால், திருட்டு கேஸ்ல புக் பண்ணப் போறேன். அப்படி ஒரு நிலைமை வந்தால் பேக்டரி யந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/217&oldid=558824" இலிருந்து மீள்விக்கப்பட்டது