பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 206

ரகசியத்தை வெளிநாட்டுக்கு விற்கப் போன களவாளியை கண்டுபிடித்த திம்மையா' என்று ஒரு செய்தி போடச் சொல்லலாமா என்று யோசித்தார் ஏனோ, டெலிபோன் செய்யவில்லை.

திம்மையா, சிந்தித்தார், இப்போ வேண்டாம். அப்புறம். இவன், கன்னையா. சொன்னதை செய்வானா? புலன் விசாரணையில் அவன் ஐம்புலன்களையும் சேதப்படுத்தி எப்படியோ சம்மதிக்க வைக்கணும். லேசுப்பட்ட சமாச்சாரமா? எவ்வளவு பெரிய மனுஷங்க இதுல இன்ட்ரஸ்ட் காட்டுறாங்க. நாளைக்கு நம்மள தண்ணி இல்லா காட்டுக்கோ, இல்ல உருப்படாத ஆயுத போலீஸ் படைக்கோ மாத்துறதாய் வச்சுக்குவோம்; அப்போ இந்த அப்பாவுவோ, அந்த வாடிக்கை எம்.டியோ. கம்பெனி ஜி.எம்.மோ ஒரு போன் போட்டால் போதுமே. டிரான்ஸ்பராவது கத்திரிக்காயாவது

மாலை, இரவாகியது.

போலீஸ் நிலைய மரங்களில் பறவைகள் துயில் கொண்ட நேரம். திடீரென்று, ஏதோ ஒரு மைனாக்குருவி, பிரளயத்தை பிரசவிப்பதுபோல் ஒலமிட்டது. ஒரே ஒரு நிமிடம்தான். வெள்ளைப் புள்ளிகள் கொண்ட கரும்பூனை ஒன்று, வாயில் கெளவிய மைனாவுடன் கீழே குதித்தபோது, காகங்களும், மைனாக்களும், தாழப்பறந்து புலம்பின. பூனையின்மேல் கால்கள் படும்படி, சாய்ந்து பறந்தன. பிறகு அந்த கொலைகாரப் பூனையை எதுவும் செய்ய முடியாது என்பதுபோல் ஆகாயத்தில் கும்பலாக, கூக்குரலாக வட்டமடித்தன.

போலீஸ் நிலையத்தின் பின்பகுதியில், அடுக்கி வைத்த பைல்களும், சேதப்பட்ட துப்பாக்கிகளுமாய் இருந்த மலைக்குகை போன்ற அறைக்குள், பின்புற கைக்கட்டு அவிழ்க்கப்படாமலே சோர்ந்த கிடந்த கன்னையா, காலடிச் சத்தம் கேட்டு கண்விழித்தார். நான்கைந்து போலீஸ் மனிதர்களுடன் தோன்றிய இன்ஸ்பெக்டர் திம்மையா, கன்யைாவை பூட்ஸ் காலால் உதைக்க, அவர் சுருண்டு சுருண்டு நெளிந்தார். இன்ஸ்பெக்டர் கர்ஜித்தார்.

"அயோக்கிய நாயே திருட்டு ஸ்கவுண்ட்ரல் நான் வாரேன், மரியாதை தெரியாமல் உட்கார்ந்தா இருக்கே? இது என்ன போலீஸ்னு நினைச்சியா, இல்ல ஒன் மச்சான்னு நெனப்பா?

சுருண்டு கிடந்த கன்யைாவின் தலைமுடியை, இன்ஸ்பெக்டர் குனிந்து பிடித்து, அவரைத் துக்கி நிறுத்தினார். கன்னையா சில்லிட்டு நின்றார். திம்மையா முழங்கினார்.

"இப்போகூட தலைமுழுகிப் போகல, நான் சொன்னதைக் கேட்டால், நீ பேஷாய் வீட்டுக்குப் போகலாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/218&oldid=558825" இலிருந்து மீள்விக்கப்பட்டது