பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 * சத்திய ஆவேசம்

தெருவுக்கு வரும நிலையில் இருந்த ஒரு போலீஸ்காரர், ஆபத்து பாண்டவனான அபயத்திலகம் இன்ஸ்பெக்டர் சொல்லி விட்டார் என்பதற்காக, ஒரு டப்பாவுக்குள் இருந்த ஊசியை எடுத்தார். ஒருத்தர் கன்னையாவின் வலது கையைத்துக்கிப் பிடித்தார். எடுத்தவர் பிடித்தவரிடம் இருந்த கையில், ஆள்காட்டி விரலின் நகத்திற்குள் ஊசியை விட்டார். கன்னையா, வலிதாங்காமல் கத்தியதில், அப்போது மரத்தில் மீண்டும் அமர்ந்த பறவைகள் கூக்குரலோடு வெளியேறின. கன்னையாவின் நகவோர சதைக்குள் ஊசி இறங்க இறங்க, அவர் "சம்மதம். சம்மதம்." என்றார். ஊசியை எடுத்தார்கள். இன்ஸ்பெக்டர் திருப்தியோடு சிரித்தார். கன்னையா, தன்னையறியாமலே சொன்னதற்கு வெட்கப்பட்டு, "முடியாது.டா என்னை என்ன வேணுமுன்னாலும் செய்யுங்கடா" என்றார்.

இன்ஸ்பெக்டர் திம்மையா, கோரமாகச் சிரித்து, குரோதமாகப் பேசினார்.

"இதோட நிற்காதுடா மகனே! நான் சொன்னதை நீ செய்யுமுன்னால், ஒன்னை விடப்போறதில்லே. இந்த திம்மையாவைப் பற்றி பெரிசு பெரிசாய் தெரிஞ்சுக்குவே. ஒன் ஆசனத்துக்குள்ளே ஊசி வைப்போம்; அதையே ஆண்குறிக்குள்ளே சொருகுவோம்; ஒன் தொடையைக் கீறி அதுக்குள்ளே அட்டையை கடிக்கவிட்டுட்டு சதையைத் தைப்போம். ஒன் மகள் மட்டும் எழுதிக் கொடுக்காமல் இருக்கட்டும், அப்படி என்னடா பொல்லாத மகள். அப்பாவுகிட்ட படுக்காமல், அவளுக்கு வேலை கிடைத்திருக்குமா?"

"ஏய், என்னை என்னவேணுமுன்னாலும் படுத்து. என் மகளைப் பற்றி பேசாதடா தேவடியா மகனே! ஒன் பெண்டாட்டி, மகள்களை வச்சு பிறத்தியார் பொண்ணுங்கள எடை போடாதடா, புறம்போக்கு."

போலீஸ்காரர்கள், அசந்து போனார்கள். அப்படியே இருந்தாலும், ஒரு இன்ஸ்பெக்டரைப் பார்த்தா இப்படிக் கேட்பது? திம்மையாவுக்காகக் காத்திருக்காமல் விசாரணை போலீஸ்காரர் கன்னையாவை எட்டி உதைத்தார் இப்போது குப்புற விழுந்தவரை, திம்மையா துக்கி நிறுத்தினார். அவர் முளையில் ஒரு கிரிமினல் வெட்டு சுயமரியாதைக்கு விடப்பட்ட பாதிப்பையும், தொழிலுக்கு விடப்பட்ட சவாலையும் சமாளித்திடலாம். திம்மையா ஆணையிட்டார்.

"இந்தாப்பா, ஒங்களத்தான் இவன் வீட்டுக்குப் போய் ரெய்ட் செய்து, இந்த பேக்டரி பொருள்ல ஒண்னு அங்கே இருந்ததாய் எஸ்டாபிளிஷ் செய்யுங்க. இவன் ஒய்பையும், மகளையும் இழுத்துட்டு வாங்க இந்தப் பயல் முன்னாலேயே, இவன் டாட்டரை படாதபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/221&oldid=558828" இலிருந்து மீள்விக்கப்பட்டது