பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 210

படுத்தினால்தான், சரிப்படுவான். இல்லைன்னா, இவன் சொன்னது மாதிரி நான் தேவடியா மகன்னு அர்த்தம் மப்டில போங்கப்பா. குயிக். வெளியாட்களுக்குத் தெரியாம காரியத்த முடிக்கணும். உஷார்’

பிரக்ஞை இழந்தவர்போல் நிர்வாணப்பட்டுக் கிடந்த கன்னையா, ஏதோ பேசப் போனார். இதற்குள், போலீஸ்காரர்களில் இருவர், மப்டியாகி வெளியே நடந்தார்கள். வசந்தியையும், அவள் அம்மாவையும் இழுத்து வருவதற்காக, யந்திரப் பொருளோடு, சைக்கிள்களில் ஏறினார்கள். அப்போது.

உள்ளே, கன்னையாவின் உயிரே ஒலமிட்டது. போலீஸ் மரத்தில், மைனாவைத் தின்ற அதே பூனை, இப்போது இன்னொரு குருவியைப் பிடிக்க, மெள்ள மெள்ள ஏறிக்கொண்டிருந்ததுஇன்னொரு மரத்தில், வேறுவிதமான பார்வையுடன்.

ஆவேசமாக நுழைந்த அப்பாவுவைப் பார்த்து, முன்பு மாதிரி, போர்ட் உறுப்பினர்கள் எழுந்திருக்க வில்லை. அவரைக் கோபமாய்ப் பார்த்து, குரோதமாய் கேட்கப் போனார்கள். பிறகு ஆசாமி உட்காரட்டும் என்று இளக்காரமாய்ப் பார்த்தபடி இருந்தார்கள். அப்பாவு, நின்றபடியே, உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தார். மகன் சங்கர், தன் சட்டைப் பைக்குள் ராஜினாமாக் கடிதம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பதைக் பார்த்தார். ஆசிரியர்கள் சார்பில் உறு:பபினராகியுள்ள படிக்காத தொழிலதிபர் சோமுமையும், நான்-டிச்சிங் ஊழியர் சார்பில் உறுப்பினரான எஸ்டேட் முதலாளி வரதராஜூலுவையும், லோக்கல் அரசியல்வாதியும், பள்ளிக்கூடமே போகாதவருமான பண்புவேந்தன், பழைய கல்லூரி மாணவர்கள் சார்பில் வந்திருப்பதையும், பின்னணியோடு பார்த்தார். மொத்தம் பதினைந்து உறுப்பினர்கள் கோரம் இல்லாமல் ஒத்தி வைக்கப்படும் போர்ட் கூட்டம் பொங்கி வழிவதையும், அந்த வெள்ளத்தில், மகன், தன்னைத் துரக்கியெறிய திட்டமிட்டிருப்பைதயும் புரிந்தவராய், மெல்லச் சிரித்தார். அஜென்டாவின் முதல் அயிட்டமே அப்பாவுவின் சில தகாத அறிவிப்புகள் பற்றியத்தான்.

அப்பாவு, திடுக்கிட்டு உட்கார்ந்தார். அவருக்கு வழியனுப்பு விழா நடத்தப் போவதுபோல் உறுப்பினர்கள், அவரை பார்த்தபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/222&oldid=558829" இலிருந்து மீள்விக்கப்பட்டது