பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 * சத்திய ஆவேசம்

அப்பாவு, அஜெண்டா காகிதத்தைப் புரட்டினார். வியப்பை வெளிக்காட்டாமலே, தன் ஆயுதத்தை வீசியெறிந்தார்.

'அஜெண்டா இருக்கட்டும். அதுக்கு முன்னால ஒரு முக்கியமான சமாச்சாரத்தை போர்ட் பரிசீலனைக்கு வைக்கிறேன். நம்ம டிரஸ்டுக்கு, நூறு கிரவுண்ட் இடம் காலியாய் இருக்குது. ஒங்களுக்குத் தெரியும். இதில் அறுபது கிரவுண்டை இருபதாயிரம் ருபாய் ரேட்டுக்கு கல்சுரல் அகாடமி வைக்கிறதுக்காக ஒரு சேட்டுக்கு கொடுத்திடலாம்."

உறுப்பினர் ஒருவர் வெகுண்டெழுந்தார். "அதெப்படி? இந்த ஏரியாவுல கிரவுண்ட் ஒரு லட்சம் ருபாய் போகுது. இது அக்கிரமம். அநியாயம். அஜெண்டாவுக்கு வருவோம்." "நான் இன்னும் சொல்லி முடிக்கல. நாமினல் ரேட்டுக்கு ரிக்கார்ட்படி நிலத்தைக் கொடுக்போம், கிரவுண்டுக்கு எழுபதாயிரம் ருபாய் வீதம் கமிஷன் கொடுப்பாங்க. நாமும். பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கைன்னு எத்தனை நாளைக்குத்தான் மொட்டையாய் நிற்கது? நமக்கும் பிள்ளகுட்டி இருக்கே. நம்மோட நேர்மைக்காக, குழந்தைகளோட எதிர்காலம் பலியாகலாமா?எந்தப் பயலும் யோக்கியனாய் இல்லாத காலத்துல, நாம் மட்டும் ஏன் யோக்கியமாய் இருக்கணும்? இதனால கண்ட பலன் என்ன? இந்த காலேஜ் பசங்களுக்கு உழைச்சு நாம் கண்ட வெகுமதி என்ன? அதனால ஒசைப்படாமல், தீர்மானம் போட்டு, உருப்படியாய் முன்னேறப் பார்ப்போம். அறுபது கிரவுண்ட் கிரவுண்டுக்கு எழுபதாயிரம் கமிஷன்: நாம் பதினாறு பேர்; என்ன சொல்றிங்க? தப்பாய் பேசியிருந்தால் மன்னிச்சுடுங்க."

அப்பாவுவை விரட்டுவதற்காக, அவர் மகனுடன் பேரம் பேசியிருந்த உறுப்பினர்களிடையே கப்சிப் அதிை. மகன்காரனின் முகம் வியர்த்துக் கொட்டியது. கை கால்கள் ஆடின. அப்படியும் எதிப்புத் தெரிவிப்பதற்காக அவர் எழப்போனபோது, இரு உறுப்பினர்கள், அவர் சட்டையையும், பேன்டையும் இழுத்த இழுப்பில், ஆசாமி நிர்வாணமாவது போலிருந்தது. அப்பாவு, வெற்றிகரமாய் சிரித்தபடி, "சரி, மினிட்ஸ்ல எழுதிக்கலாமா என்றார். பிறகு மகனை ஒரக்கண்ண்ால் பார்ததபடியே அஜென்டாவுல 'ஏதோ ஐந்து லட்சம் ரூபாய் தலைவரின் தகாத அறிவிப்புன்னு போட்டிருக்கு என்றார்.

படிக்காத சோமையா ஆற்றுப்படுத்தினார். "அதைப் பெரிசா எடுத்துக்காதிங்க. நீங்க... பல்கலைக் கழகத்துக்கு ஐந்து லட்சம் ருபாய் வழங்குறதாய் சொன்னது பெரிய தொகை. போர்ட் சீரியஸாய் விசாரிச்சு கொடுத்ததுன்னு ஒரு ரிக்கார்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/223&oldid=558830" இலிருந்து மீள்விக்கப்பட்டது