பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் - 212

ஏற்படுத்தத்தான். மற்றபடி உங்களுக்கு எதிர்ப்பாய் இல்ல. யுனிவர்சிலிட்டிக்கு ஐந்து லட்சம் கொடுத்தால்தான் அறுபது கிரெளண்டை விற்கமுடியுமுன்னும் எங்களுக்கும் தெரியும்."

அப்பாவு, இரண்டாவது அயிட்டமான தற்காலிக முதல்வர் மாணிக்கத்தை நிரந்தரமாக்கல்! என்பதைபடித்துவிட்டு பதிலளித்தார். சில்லரைக் கணக்குலேயே கையெழுத்துப் போட மறுக்கிறான். கிரெளண்டை விற்கும்போது, அண்டர் கிரெளண்ட் வேலை செய்வான். பேசாமல் லாஜிக் டிபார்ட்மென்ட் சின்னராசுவைப் பிரின்ஸ்பாலாய் போட்டுடலாம்."

"சின்னப் பையன், ஜூனியர்" "அதனாலதான் போடணும் என்கிறேன். அவன் விவரம் தெரியாத அப்பாவி. யூனியன்ல இல்ல. நீட்டுன இடத்துல கையெழுத்துப் போடுவான். இப்படிப்பட்டவன்தான் நமக்கும் தேவை."

"சரிதான், அந்தப் பையன் டாக்டர் பட்டம் கிடக்கட்டும்-ஒரு எம்பில் பட்டம்கூட வாங்கலியே? யுனிவர்ஸிட்டி இணங்குமா:

"என்ன ஸார் நீங்க? அடுத்த தேர்தலுல எம்.எல்.ஏ.வாகப் போறிங்க. நியூஸ் பேப்பர் படிக்கது கிடையாதா?

"அந்தப் பழக்கம் இருந்தால் அவர் எப்படி எம்.எல்.ஏ. ஆவார்?" "பச்சப்பாஸ் தமிழ் புரபஸர் ராமச்சந்திரன், ஹைகோர்ட்ல பி.ஹெச்.டி.பட்டம் வாங்காதவங்க, பிரின்ஸ்பாலாய் இருக்க தகுதியில்லாதவங்கன்னு 1982-ம் ஆண்டு அரசு ஆணையை சுட்டிக்காட்டி, அதற்கு எதிராய் வழக்குப் போட்டார். இந்தச் சட்டம் அரசாங்க காலேஜ்களுக்குத்தான் பொருந்தும். தனியார் கல்லூரிகளுக்கு சம்பந்தமில்லன்னு ஹைகோர்ட் தீர்ப்பளிச்ச பிறகு, எவன் நம்மை கேட்க முடியும்?"

"சரி, சின்னராக பிரின்ஸ்பால். அப்புறம்?"

"டிரஸ்ட் தேர்தல்னு போட்டிருக்கு எனக்கு ஒரு யோசனை. இந்த செட்டப்பே கன்டினு செய்யலாமுன்னு நினைக்கேன். ஒன்றுபட்டு நின்னால், நாமே வந்துடலாம்."

"அப்பாவு ஸார். பழைய மாணவர்கள்ல சிலர், காலேஜ்ல படிக்காதவங்க நின்னால் தோற்கடிக்கனுமுன்னு நினைக்காங்களாம். இதே மாதிரி ஆசிரியர்களும், நான்-டீச்சிங் பேர்வழிகளும் பேசுறாங்களாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/224&oldid=558831" இலிருந்து மீள்விக்கப்பட்டது