பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 * சத்திய ஆவேசம்

சொல்லிக் கொண்டாள். சொல்லச் சொல்ல, லேசான தெம்பு. அப்பாவை குழந்தைபோல் அணைத்தபடி அவள் தாயானாள். இறுதியில் இருவரும் துக்கச் சுமையே துக்கச் சுமையாக, இருந்தபடியே துங்கிப் போனார்கள்.

கலையில் கண் விழித்தாலும், பேராசிரியரும், அவர் மகளும், உயிரோடு சமாதியானவர்கள்போல், தத்தம் உலகில் மணிக்கணக்கில் அந்தி சாயும் மாலை வரை சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கதவு தட்டப்பட்டது. இருவரும், இருந்த இடத்தை விட்டு நகராமலே, ஒருவரை ஒருவர் பார்த்து, அப்புறம் கதவையும் பார்த்துக் கொண்டார்கள். இறுதியில் மேகலா போய், கதவைத் திறந்தாள். ஐம்பது வயது மனிதர் ஒருவர், கையில், நான்கைந்து பத்திரிகைகளோடு எதிர்ப்பட்டார். நல்ல உயரம். ஒடுங்கிய உடம்பு. அணைக்கட்டில் கிடக்கும் ஏரி போன்ற நிறை கண்கள். தீட்சண்யமான பார்வை. நாலு முழ வேட்டி. கசங்கிய சட்டை

வந்தவர், தன்னைப் புரியாமல் பார்த்த மேகலாவை, அன்போடு பார்த்தபடியே, பேராசிரியரிடம் போனார்.

"என்னைத் தெரியுதா ஸார்?"

"நீங்க என் ஸ்டுடன் ஏகாம்பரம், எடிட்டராய் இருக்கிற கைவை' பத்திரிகையில் புருப் ரீடர்தானே?"

"ஒரு தடவை பார்த்தாலும் மறக்காமல் இருக்கிங்களே?"

"நானும் ஞாபக மறதிப் பேர்வழிதான். அதையும் மீறி நீங்க நிற்கிங்க. என் ஸ்டுடண்ட், என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் வெளியே அனுப்புனப்போ, நீங்க... டீ.க்கடையில் ஆறுதலாய் பேசுனதை, இன்னும் மறக்கல ஸார். இந்தக் காலத்தில் ஏழைகளோட உழைப்பு, அவங்களுக்கு எதிராவே திருப்பி விடப்படுகிறது. எனக்கு எதிராவே நான் செயல்படுகிறேன். இது இந்த சமூகத்தோட நோய்னு நீங்க அப்ப சொன்னது, இப்பதான் சொன்ன மாதிரி இருக்குது ஸார். மேகலா, இவர்தான் நான் சொன்னேன் பாரு. கைவை பத்திரிகையோட."

"நான் இப்போ அங்கே இல்லை. என் பேர் கண்ணம்மா."

"என்ன கண்ணம்மாவா?

"மன்னிக்கனும் கண்ணன்னு என்னைச் சொல்லி, அம்மான்னு அவங்களை அழைச்சேன்."

பேராசிரியர், கடகடவென்று, பாலத்தில் ஒடும் ரயில் போல சத்தம் போட்டுச் சிரித்தார். பிறகு பாதிச் சிரிப்பிலேயே, தன் பாதிப்புகள் மனதுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/227&oldid=558834" இலிருந்து மீள்விக்கப்பட்டது